ரசவடையை விரும்பாத
குமரி மாவட்டக்காரன் உண்டோ ? இட்லி- ரசவடை , தோசை- ரசவடை அந்த மாவட்ட ஸ்பெஷல் கூட
. என் அம்மாவு கூட அடிக்கடி ரசவடை செய்வார் . எப்போதாவது இப்போதும் என் வீட்டில் ரசவடை
தயார் ஆகும் .ஆமவடை கட்டன் சாயா எப்போதுமே ஸ்பெஷல்தான்… சோறு ,தீயல் , ரசவடை கூட நல்ல காம்பினேஷன்தான்
. வற்றக்குழம்பு / காரக்குழம்பு வகையறாதான் தீயல் ஆனால் தனித்துவமானது அதுவும் அந்த மாவட்ட ஸ்பெஷல்தான்.
வாழைக்காய் பொடிமாசும் தீயலுக்கு காம்பினேஷந்தான்.
ஒரு நாள்
ஒரு ஹோட்டல் மெனுவில் ரசவடையைப் பார்த்ததும் வாயில் எச்சில் ஊற ஆர்டர் போட்டுவிட்டேன்
. மெதுவடையை ரசத்தின் ஊறவைத்து கொடுத்ததும் நொந்து போனேன் . இது ரசவடைன்னு சொன்னா ரசம்கூட நம்பாதுடா ! சாம்பார்வடை
தயிர் வடைக்கு மெதுவடை பொருத்தமானது , மேலே காரப்பூந்தி தூவினா ஒகே . ரசவடைக்கு ஆமவடை
[ மசால் வடை /பருப்பு வடை ] தானே பொருத்தம் . இப்படி சொன்னா பூமர் அங்கிள்ன்னு சொல்லிருவாங்களோ
!
இப்போதெல்லாம்
சாப்பட்டைப் பற்றி பதிவு போடவில்லை என்றால் முகநூலில் இருந்து நீக்கிவிடுவாங்களாமே
! எதுக்கு வம்பு நானும் போட்டுட்டேன்…. சரியா ?
சுபொஅ.
23/10/25
குறிப்பு
: தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசியல் இல்லாமல் பதிவு போட்டுட்டேன் … நண்பரோடு போட்ட
சவாலில் வெற்றி !

0 comments :
Post a Comment