எதிர்காலம்
கொஞ்சம்
இருட்டாகத்தான்
தெரிகிறது
அறிவியலின்
பாய்ச்சல் வேகம்
பிரமிக்க
வைக்கிறது
அப்புறம்
ஏன்
எதிர்கால
பயம் ?
கேள்வி நியாயந்தான்
கத்தி
யார் கையில்
இருக்கிறது
எதற்குப்
பயன்படுகிறது
என்பதுதானே
கேள்வி
லாபவெறி போதையில்
தலைதெறிக்க
ஓடும்
சுரண்டும்
வர்க்கம்
மனிதனை
மறந்து போகுமோ
?
உற்பத்தி
செய்ய
மனிதனுக்கு
மாற்றாய்
AI செயற்கை
நுண்ணறிவு
சரிதான்
! சரிதான் !
இனி நுகர்வோராகவும்
AI போதுமோ
!
வாங்கும்
கரங்கள் இல்லாமல்
எதனை யாரிடம்
விற்பீர்கள் ?
உலகமே சுடுகாடாயின்
நீங்கள் மட்டுமா
பிழைத்துக்
கிடப்பீர்கள் !
லாபவெறி போதை
உச்சத்தில்
கொண்டோரே
சொல்லுங்கள்
!
மதமும் சாதியும்
இனமும்
மனிதத்தைக்
கூறுபோடும்
ஒரு போதும்
வாழவிடாது !
மார்க்சியம்
தழைக்காமல்
எதிர்காலம்
இல்லை
மனித குலத்துக்கு!
சுபொஅ.
21/10/25.
0 comments :
Post a Comment