புத்தகம் - கேள்வி - அனுபவம்

Posted by அகத்தீ Labels:


புதிதாய் வாசிக்கும் புத்தகம்
ஒவ்வொன்றும்
என்னுள் வேர்விட்டிருக்கும் அறியாமையின்
ஆழ – அகலத்தை அடையாளம் காட்டுகிறது ……..

துளிர்த்துக் கொண்டே இருக்கும்
கேள்விகள் ஒவ்வொன்றிலும்
ஞானத்தைக் கண்டடையும் ஆர்வம்
பூத்துக் கொண்டே இருக்கிறது…

தோல்விகள் ஒவ்வொன்றும்
அனுபவக் கல்லில்
உரசி உரசி புத்தியை
கூர் தீட்டிக்கொண்டே இருக்கிறது ….


முடிவற்ற இந்தத் தொடர் பயணம்
மூதாதையர் எமக்களித்தது
யாம் தவறாமல் எம் சந்ததிக்கு
கையளிக்க வேண்டியது …

[ ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை நோக்கி …]
0 comments :

Post a Comment