புத்தாண்டினை எண்ணி

Posted by அகத்தீ Labels:

புத்தாண்டினை எண்ணி...



ஆரம்பிக்கப் போகிறது ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா கூடாத என்கிறஅக்கப்போர்..

இந்து கோயில்களை அன்று இரவு 12 மணிக்கு திறந்து
பூஜைசெய்யக்கூடாதென கொக்கரிக்கப் போகிறது இந்துவெறி..

கூடவே தமிழ்ப் புத்தாண்டு தையா ? சித்திரையா ? - என மல்லுக்கட்ட தயாராகிறது இன்னொரு கூட்டம் ..

யார் என்ன கூப்பாடு போடினும் அவரவர் விருப்பம் போல் ஏதோ ஒன்றையோ / இரண்டையோ / அனைத்தையுமோ கொண்டாடத்தான் போகிறார்கள் !

காலண்டர் , பஞ்சாங்கம் எதுவுமே இல்லாத காலம்
ஒன்றிருந்ததே ! அதுவே பரவாயில்லை எனப்புலம்ப வைத்துவிடுவார்கள் !

கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன் .. மண்டையைக் குடைந்து பார்த்தேன் ..

உங்கள் பிறந்த நாள் எது என அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறீர்கள் ?

உங்கள் சான்றிதழ் எல்லாவற்றிலும் உள்ள கணக்கு எது ?

உங்கள் திருமணநாள் எதுவென டக்கென சொல்லுகிறீர்கள் ?

உங்கள் பிள்ளைகள் / பேரன் பேத்திகள் பிறந்த நாள் எது ? திருமணநாட்கள் எதுவென நினைவில் வைத்திருக்கிறீர்கள் !

எல்லாவற்றையும் விட சம்பளம் வாங்க எது உதவுகிறது ?

அதனை ஏற்றுக்கொள்ள தயக்கம் ஏன் ! கொண்டாடுவதும் கொண்டாடாமலிருப்பதும் அவரவர் விருப்பம் . உரிமை .

சரி ! பண்பாட்டு ரீதியாக தையைக் கொண்டாட வேண்டாமா என்கிறக்குரல் காதில் விழுகிறது ! கூடவே சித்திரை என ஒருவர் எம்பிக்குதிப்பதும் காதில் விழுகிறது .

சரி ! சரி ! வம்பே வேண்டாம் ! சுயமரியாதை மிக்க தமிழர்கள் தையைக் கொண்டாடுங்கள் ! இல்லையா ?

பிராமணிய மேலாண்மையை ஏற்றுப் பணிவோர் சித்திரையைக் கொண்டாடுங்கள் !

எதைக்கொண்டாடினாலும் வாழ்வியலோடு இணைந்து நிற்பது ஆங்கிலப் புத்தாண்டு என சிலர் தூற்றும் காகேரியன் காலண்டர் ஆண்டே ! சம்பளத் தேதியை மறக்கலாமா?

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுங்கள் சொல்லாமல் போங்கள் ! நடைமுறைக் கணக்கை மாற்ற முடியுமா ?

அவரவர் விரும்புகிற புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும் !
புத்தாண்டு சபதங்களில் நம்பிக்கை இல்லை !

எதைக் கொண்டாடினும் “போதை” வேண்டாம் !
மானுடம் போற்றுங்கள் !

புத்தாண்டில் ..
********************************
*********************
****************
************
********
அவரவர் விரும்பும் புத்தாண்டை
அவரவர் கொண்டாட வாழ்த்துகள் !
ஒவ்வொரு நாளும் புத்துணர்வே !
உணர்ந்தால் நாளும் கொண்டாட்டம
********************************
*********************
****************
************
********
கலப்பு இல்லா உலகம் இல்லை
கலப்பு எல்லாம் கெட்டதுமில்லை

சாதி கலப்பு ஊருக்கு நல்லது
மதங்களின் கலப்பு நாட்டுக்கு நல்லது
நாகரீகம் கலப்பது மனிதர்க்கு நல்லது
மனங்களின் கலப்பு எல்லோர்க்கும் நல்லது

கலப்பு இல்லா உலகம் இல்லை
கலப்பு எல்லாம் கெட்டதுமில்லை

கொடுக்கல் வாங்கல் இல்லாமல்
உலகம் வளர்ந்தது கிடையாது

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்
எங்கும் என்றும் கிடையாது

கலப்பு இல்லா உலகம் இல்லை
கலப்பு எல்லாம் கெட்டதுமில்லை

வாழும் நொடிகள் ஒவ்வொன்றாய்
நீயும் சரியாய் எண்ணிப் பாரு !

யாருடைய உழைப்பும் இல்லாமல்
நீயும் வாழமுடியுமா கூறு ! - பதில் கூறு

கலப்பு இல்லா உலகம் இல்லை
கலப்பு எல்லாம் கெட்டதுமில்லை

பஞ்சாங்கப் பெருமைகள் பேசி
பாழும் கிணற்றில் வீழாதே – வீணில்
பகைமை நெருப்பை விசிறிவிட்டு
முட்டி மோதி சாகாதே – நீயும் சாகாதே !

கலப்பு இல்லா உலகம் இல்லை
கலப்பு எல்லாம் கெட்டதுமில்லை
********************************
*********************
****************
************
********

காலப்பெருநதி
---------------------------
காலப்பெருநதி நிற்பதுமில்லை
பதிந்த சுவடுகள் நிரந்தரமில்லை

மறைந்த சுவடுகள்
மறைக்கப்பட்ட சுவடுகள்

தொலைந்த சுவடுகள்
தொலைக்கப்பட்ட சுவடுகள்

மங்கலான சுவடுகள்
மங்கலாக்கப்பட்ட சுவடுகள்

துலங்கிய சுவடுகள்
துலக்கப்பட்ட சுவடுகள்

காலப்பெருநதி நிற்பதுமில்லை!
பதிந்த சுவடுகள் நிரந்தரமில்லை!

தோண்டி எடுத்து வரலாறு எழுதலாம் -அதிலும்
துலங்கா உண்மைகள் ஆயிரம் இருக்கும்!
ஆதிக்கக் கரங்கள் எழுதிய ஏட்டில்
ஆயிரம் புனைவுகள் புதைந்திருக்கும்!


பதிந்த சுவடுகளில் பாடம் இருக்கும்
படிக்க மறந்தால் சோதனை தொடரும்!
காலந்தோறும் மாற்றங்கள் நிகழும் – இதனை
கவனத்தில் கொண்டால் நம்பிக்கை ஓங்கும் !

காலப்பெருநதி நிற்பதுமில்லை
பதிந்த சுவடுகள் நிரந்தரமில்லை

***********
அவரவர் விரும்பும் புத்தாண்டை
அவரவர் கொண்டாட வாழ்த்துகள்
ஒவ்வொரு நாளும் புத்துணர்வே
உணர்ந்தால் நாளும் கொண்டாட்டம்
2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015

0 comments :

Post a Comment