அறிவை இன்னும் கூர்தீட்டு !

Posted by அகத்தீ Labels:

 


அழிவை ஆராதிக்கிற தேசத்தில்

அறிவை இன்னும் கூர்தீட்டு !

காரணம் ஏன் எனும் அறிவுமிலார்

கண்கள் திறக்க கூர்தீட்டு !

 

கையில் விளக்குடன் கிணற்றில் வீழ்வோர்

கண்கள் திறக்க கூர்தீட்டு !

பொய்யில் புளுகில் மயங்கிய புண்ணியர்

மெய்விழி திறக்க கூர்தீட்டு !

 

தூங்கியதுபோல் நடிக்கும் மானிடர்

மெய்விழி திறக்க கூர்தீட்டு

சாதிமத பொய்மை இருட்டு கிழிய

அறிவை இன்னும் கூர்தீட்டு !

 

சுபொஅ.

9/11/2022.

 


கூப்புக்காடு [வால்பாறையின் கதை]

Posted by அகத்தீ Labels:

 

 


தேயிலைக் காடுகளின் வாழ்க்கைப் பாட்டை எத்தனை நாவல்களில் படித்தாலும் நெஞ்சை அறுக்கும் வலி ஓயாது .கூப்புக்காடு மீண்டும் ஒரு முறை அந்த வலியை அனுபவிக்கச் செய்தது .

 

வழக்கமாக வேகமாகப் படிக்கும் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியதும்  ஆமைவேகத்துக்கு மாறிவிட்டேன் . இதை நாவல் என்றும் சொல்லலாம் . ஆசிரியரின் வாழ்வனுபவப் பதிவு என்றும் சொல்லலாம் . வால்பாறையின் கதை என்கிற துணை தலைப்பிற்கு பொருந்துகிறது என்றும் சொல்லலாம் .

 

வால்பாறை உருவாக்கம் விரிவாக்கம் வாழ்க்கை வலி மூன்றையும் தம் அனுபவங்களூடே நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் . ஆகவே கதை என்பதைக் காட்டிலும் சிக்கிக் கொண்ட அப்பாவிகளின் வாழ்க்கையின் கண்ணீரும் இரத்தமும்தான் இந்நூல் எனலாம் . அந்தக் காட்டிலிருந்து படித்து உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டவரின் நினைவலைகளில் பதிந்துவிட்ட துயரத்தின் வடுக்களை தொகுப்பதில் வெற்றி பெற்றுள்ளது .

 

 “டி.செல்வராஜின்  ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின்  ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய  ‘ஏலச்சிகரம்’,  ‘குறிஞ்சாம் பூ’,  ‘ஜன்ம பூமிகள்’, கு.சின்னப்பபாரதியின்  ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய  ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய  ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின்  ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை ,வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும் ; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும் ,அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]”

 

இவை ஜனநேசனின் “ ஏலோ..லம்” நாவல் நூல் அறிமுகத்தில் நான் எழுதியது .என் சிற்றறிவுக்கு இவ்வளவு பட்டியல் தெரியும் போது ஏன் அணிந்துரையிலோ முன்னுரையிலோ “ எரியும் பனிக்காடு” மட்டுமே சுட்டப்படுகிறது . [அது மிகச் சிறந்த நாவல் சந்தேகமில்லை ] தமுஎகசவின் முன்னத்தி ஏர்கள் செல்வராசும் சின்ன்ப்பபாரதியும் என்னைப் பார்த்து கேட்பது போலிருந்தது .

 

இந்த நாவலில் வால்பாறையில் தொழிற்சங்கம் பற்றிய செய்திகள் வந்தாலும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை . 1960 ல் நடந்த போராட்டம் குறித்து போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் . தோழர் மைதிலி சிவராமன் எழுதிய “வால்பாறை வீரகாவியம்” என்கிற சிறு பிரசுரம் என்நெஞ்சில் விசிறிய நெருப்பு ; ஒரு வேளை அணிந்துரை எழுதிய ஆதவன்தீட்சண்யாவையோ நூலாசிரியர் ஆராவையோ போய்ச் சேரவில்லையோ ?

 

தேயிலை செடி அல்ல மரம் , தேயிலைத் தோட்டத்தின் முன் தயாரிப்பே கூப்புக்காடு, அங்கு உழைப்புச் சுரண்டலும் பாலியல் சுரண்டலும் கோலோச்சிய கொடுமை ,மருத்துவ வசதியின்மை கொன்ற உயிர்கள் எல்லாமும் பேசப்படும் இந்நூலை வாசிப்பீர் ! வால்பாறையின் வரலாற்றை நுகர்வீர் !

 

கூப்புக்காடு [வால்பாறையின் கதை] , ஆசிரியர் : ஆரா,

வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044- 24332424 /24330024/24332934  ,9498062424 ,விலை : ரூ.200 / பக்கங்கள் :208.

 

 

சுபொஅ.


என் மவுனம் என்பது [kannada

Posted by அகத்தீ Labels:

 

மூன்றாவதாக என் கவிதை ஒன்று கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது .தோழர் மீனாட்சிசுந்தரமே இம்முறையும் செய்துள்ளார் .மகிழ்ச்சி.நன்றி .
ನನ್ನ ಮೌನ
ದೌರ್ಬಲ್ಯದ ಅಭಿವ್ಯಕ್ತಿ!
ನನ್ನ ಮೌನ
ಹೆಪ್ಪುಗಟ್ಟಿದ ಆತಂಕ!
ನನ್ನ ಮೌನ
ಅಘಾತವು ಧರಿಸಿದ ತಾತ್ಕಾಲಿಕ ಮುಖವಾಡ!
ನನ್ನ ಮೌನ
ಕುದಿಯುವ ಕ್ಷಣದ ನಿರೀಕ್ಷೆ!
ನನ್ನ ಮೌನ
ಮಾತಿಗಿಂತಲು ಬಲಿಷ್ಟವಾದ ಪ್ರತಿರೋಧ!
ನನ್ನ ಮೌನ
ಒಳಗೊಳಗೆ ದಹಿಸುತ್ತಿರುವ ಅಗ್ನಿ!
ನನ್ನ ಮೌನ
ಮನಸೊಳಗಿನ ಸಂಕೀರ್ಣ ಲೆಕ್ಕಾಚಾರ!
ನನ್ನ ಮೌನವನ್ನು
ಒಪ್ಪಿಗೆಯೆಂದು
ತಪ್ಪಾಗಿ ಸ್ವೀಕರಿಸಬೇಡಿ!
( Su Po Agathiyalingam ರವರ ತಮಿಳು ಕವನದ ಕನ್ನಡ ಅನುವಾದ)
என் மவுனம் என்பது
ஆற்றாமையின் வெளிப்பாடு!
என் மவுனம் என்பது
ஆழந்த கவலையில் உறைதல்!
என் மவுனம் என்பது
இதயக் குமுறலின் தற்காலிக முகமூடி !
என் மவுனம் என்பது
கொதிநிலை எட்டக் காத்திருப்பு !
என் மவுனம் என்பது
பேச்சைவிட வலிமையான எதிர்ப்பு!
என் மவுனம் என்பது
உள்ளுக்குள் புகையும் பெருநெருப்பு !
என் மவுனம் என்பது
மனசுக்குள் போடும் பெரும் கணக்கு !
என் மவுனத்தை சம்மதமென்று
தப்புக்கண்க்குப் போடாதீர் !
சுபொஅ.
Mookaiyan Murugan, இரா எட்வின் and 45 others
9 Comments
3 Shares
Like
Comment
Share

என் மவுனம் என்பது

Posted by அகத்தீ Labels:

 

என் மவுனம் என்பது

தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் தமிழ்க்கவிதை கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பார்த்தேன்.

Silence
My silence
An expression
of my inability
My silence
An Immersion into
deep concerns
My silence
A temporary veil of
Heart’s rumblings
My silence
A waiting for the
Boiling point
My silence
A protest stronger
Than my words.
My silence
A colossal fire
simmering inside
My silence
Mental working of
Mega calculation
Don’t mistake
My silence as
Concurrence
என் மவுனம் என்பது
ஆற்றாமையின் வெளிப்பாடு!
என் மவுனம் என்பது
ஆழந்த கவலையில் உறைதல்!
என் மவுனம் என்பது
இதயக் குமுறலின் தற்காலிக முகமூடி !
என் மவுனம் என்பது
கொதிநிலை எட்டக் காத்திருப்பு !
என் மவுனம் என்பது
பேச்சைவிட வலிமையான எதிர்ப்பு!
என் மவுனம் என்பது
உள்ளுக்குள் புகையும் பெருநெருப்பு !
என் மவுனம் என்பது
மனசுக்குள் போடும் பெரும் கணக்கு !
என் மவுனத்தை சம்மதமென்று
தப்புக்கண்க்குப் போடாதீர் !
சுபொஅ.
Translation by Com.Ramanan, LIC

Like
Comment
Share