பேசு … பேசு…பேசு…

Posted by அகத்தீ Labels:

 





பேசு … பேசு…பேசு…

 

-       ஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ்

 

பேசு ! உன் உதடுகள் சுதந்திரமானவை

பேசு ! நாக்கு இப்போதும் உன்னுடையதே !

பேசு ! பற்களும் இப்போது உன்னுடையதே !

பேசு ! உனது வாழ்க்கை இப்போதும் உன்னுடையதே !

 

உலைக்களத்திற்கு உள்ளே பார் !

எழுந்தாடும் தீயின் நாக்குகள் !

பழுத்துச் சிவந்த இரும்புப் பூட்டை

உடைத்து வாயைத் திற !

இறுகப்பூட்டிய சங்கிலிகளைப்

அறுத்தெறி உடனே !

 

பேச இருக்கும் நேரம் குறைவுதான்

என்றாலும் பேசப் போதுமானது !

உடல் அழிந்து போகும் முன்

நாக்கு மரத்துப் போகும் முன்

இருக்கும் நேரம் குறைவுதான் – ஆம்

குறைவுதான் என்றாலும்

இருக்கும் நேரம் போதுமானது!

 

பேசு ! பேசு ! பேசு !

இப்போது நீ உயிருடன்தான் இருக்கிறாய் !

பேசு ! பேசு ! பேசு !

பேச வேண்டியது அனைத்தையும்

இப்போதே பேசிவிடு !

 

[ நான் குறித்து வைத்த கவிதையில் மொழி பெயர்ப்பாளர் பெயரைக் குறித்து வைக்கவில்லை . யாராயிருப்பினும் அவருக்கு நன்றி . பி.கே.ராஜன் என நினைவு .]

ஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் : 13 பிப்ரவரி 1911 – 20 நவம்பர் 2084. பஞ்சாபியிலும் உருதிலும் எழுதிய கவிஞர் .எழுத்தாளர் .கம்யூனிஸ்ட் . இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் பிறந்தவர் .

 

சுபொஅ.

09 ஜனவரி 2026 .

 


0 comments :

Post a Comment