தொடர்பு எல்லைக்கு
வெளியே இருந்து …
[ அவசரகாலம்
தொட்டு என்னோடு பயணித்த - பயணித்துக் கொண்டிக்குக்கிற ஒவ்வொரு தோழருக்கும்…]
கரங்கோர்த்து
பயணித்த
என் இனிய
தோழா !
இப்போது
நீ
வயது முதிர்வால்
வீட்டில்
முடங்கி இருக்கலாம் …
வாழ்க்கைச்
சூழலால்
முன்போல்
இயங்க முடியாதிருக்கலாம்…
ஏதேனும் மனக்
கசப்பில்
ஒதுங்கி இருக்கலாம்…
ஒரு வேளை
விடை பெற்றிருக்கலாம்….
நானும் முன்போல்
இல்லை
இப்போதெல்லாம்
தொடர்பு எல்லைக்கு
வெளியேதான்.
என் எழுத்தும்
முகநூலும்
சமூக வலைதளமுமே
உறவை சொல்லிக்
கொண்டிருக்கிறது
அதுவும் எவ்வளவு
நாளோ !
நாம் ஓர்
உயர் லட்சியத்திற்காக
போராடிய நாட்கள்
அமைப்பில்
திரண்ட நாட்கள்
நம் நினைவடுக்குகளில்
ஆழமாய் வேர்விட்டிருக்கிறது
!
நீயும் நானும்
எங்கிருந்தாலும்…
நமக்குள்
இடைவெளி
எவ்வளவு இருந்தாலும்….
கடைசி மூச்சடங்கும்
வரை
செங்கொடியை
நெஞ்சில்
சுமந்திருப்போம் !
வேறென்ன வேண்டும் நமக்கு ?
சுபொஅ.
10/04/25.
வர்ஜீனியா.
0 comments :
Post a Comment