உயிர்ப்புடன் இருக்கும் உட்கட்சி ஜனநாயகம்
[ ‘ உட்கட்சி ஜனநாயகமும் உருட்டுக்கட்டைகளும்’ என்ற பெயரையே நான் கட்டுரைக்குச் சூட்டி இருந்தேன் . தீக்கதிர் ஆசிரியர் நாகரிகம் கருதி மேலே உள்ளவாறு தலைப்பை மாற்றிவிட்டார் ; ஆகவே முதல் வரி சற்று பொருத்தமற்று தோண்றும் என் தலைப்போடு சேர்ந்து வாசிப்பின் விளங்கும் ]
சு.பொ.அகத்தியலிங்கம்
தலைப்பைப் பார்த்து அசந்து விடாதீர்! வலைதளத்தில் முகநூலில் நையாண்டிக்கு உள்ளாயிருக்கும் விவகாரம் இது. திமுக உட்கட்சி தேர் தலில் உருட்டுக் கட்டைகளோடு மோதிய படத்தை வெளியிட்டு இதுதான் உட்கட்சி ஜனநாயகம் என கிண்டலடித்திருந்தார் ஒருவர். அம்மானை ஆடுவது போல மாவட்டச் செய லாளர்களை மாற்றி மாற்றி விளை யாடுவதா உட்கட்சி ஜனநாயகம் எனஇன்னொருவர் பதிலடி கொடுத்திருந் தார். இப்படி ஆளுக்காள் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்ட போது சும்மாஇருந்தால் எப்படி நான் என் பங்குக்கு உள்ளே புகுந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகள் உட்கட்சியில் ஜனநாயகம் உயிர்ப் புடன் இருப்பதன் சாட்சியம் என் றேன்.
தின இதழ் கண்ணன் என்ப வர் கம்யூனிஸ்ட் கட்சியில் ஜனநாயகமேஇல்லை என பெரும் போடாய்போட்டுவிட்டார். அதனை வழி மொழிகிறார் பலர் என்கிறபோது; அவர்களுக்கு பதில் சொல்லுவது பொது புத்தியில் உறைந்து போயுள்ள கசடுகளை நீக்க உதவுமல்லவா?
“கொடிபிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான்; கோஷ மிடும் தொண்டன் கொள்கை வகுப் பான்” என அலங்காரமாகச் சொல்வதை உண்மையில் செயல்படுத்துகிற கட்சிஎது? இக்கேள்வியை அல சினால்தான் உண்மை புலப்படும்.
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் லட்சணம் என்ன? தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை அக்கட்சியின் உறுப்பினர்கள் கூடியா தேர்ந் தெடுத்தார்கள்! இல்லையே! அவர்களின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா நியமித்தார். அவரை யாராவது வாக்களித்தா தேர்வு செய்தார்கள்!இல்லையே! ஆர்எஸ்எஸ் ஆலோசனைப்படி ஒரு சடங்கு முறைக் கூட்டம் மூலம் கிரீடம் சூட்டப்பட்டவர் அவ்வளவே! இப் போதல்ல எப்போதும் எங்கும் எல்லாம் அங்கு நியமனமே! ஜனநாய கத்தை மருந்துக்கும் மதிக்காத தலைமை அது. துவக்கம் முதலே இதன் குணம் அப்படித்தான். மற்றஅரசியல் கட்சிகளின் கீழ் பல் வேறு தொழிற்சங்கம். மாணவர், மகளிர் அமைப்புகள் இருக்கும்; ஆனால்பாஜகவின் மொத்தக் கடிவாளத் தையும் கையில் வைத்திருப்பது ஆர் எஸ்எஸ்தான். அதன் இன்னொரு கிளையே பாஜக ! ஆம், மற்ற கட்சி களில் கட்சிதான் மரம் அதில் பலகிளைகள் இருக்கும். இங்கே ஆர் எஸ்எஸ்தான் மரம். கிளைதான் பாஜக. மரம் தான் கிளையை இயக்கும் கிளை மரத்தை இயக்க முடியாது.
பாஜகவில் ஆக சக்திமிக்க தலைமையான ஆர்எஸ்எஸ்ஸிலாவது தேர்தல் உண்டா? ஆர்எஸ்எஸ் அகில இந்தியதலைமையான சர்சங்சாலக் நியமனம் எப்படி? ஹெட்கேவர் முதலில் அமைப்பை உருவாக்கியவர் என்றஅடிப்படையில் அந்த பொறுப்புக்கு வந்ததுசரி ! அவர்சாகும் போது இவர் என்வாரிசு என அறிவித்து எழுதி வைக்க அடுத்தவர் பொறுப்புக்கு வருவது போல் எழுதி வைக்க; அதுவே தொடர்கதையானது. இப்படியே மரணம்/ஓய்வில் அடுத்தவரை கைகாட்ட சித்பவன்பார்ப் பனர்கள் மட்டுமே தலைமைப்பொறுப்புக்கு வரமுடியும். கொள்கை யில் இறுதி முடிவு இவர் கையிலேதான். இவர்கட்டளைக்கு மறுப்புக் கிடையாது.

காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் சுதந்திரத்துக்கு முன் உட்கட்சி ஜனநாயகம் ஓரளவு இருந் தது. மகாத்மா காந்தி தானே நிற்பதாகக் கருதவேண்டும் என முன்மொழிந்த பட்டாபி சீத்தாராமையாவை எதிர்த்து போட்டியிட்டு நேதாஜி வென்றது வரலாறு; காலப்போக்கில் அதிகாரம் தந்த ஆணவத்தில் இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என முழங்கிய சர்வாதிகாரத்தில் - உட்கட்சி ஜனநாயகம் ஓரங்கட்டப் பட்டு நியமனங்கள் தொடர்கிறது. ராகுல்காந்தி உட்கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசினாலும் - இளைஞர் காங்கிரஸ் தேர்தலை முறையாக நடத்த முயன்ற போதிலும் - நியமனக் கலாச்சாரமே அங்கும் தொடர்கதை. நேரு, இந்திரா எனத் தொடர்ந்த போது அது வாரிசுரிமையாக மக்களால் பார்க்கப்படவில்லை;
ஆனால் ராஜீவ், ராகுல் எனத் தொடர்வது ஆரோக்கியமான ஜனநாயகமா என்கிற ஐயம் எழுகிறது. இங்கேஆளுக்கு ஆள் அபசுவரம் வாசிப்பதும்;மேலே தலைவரே இறுதி முடிவெடுப் பதுமே காங்கிரஸின் வாடிக்கை.
ஆனால் ராஜீவ், ராகுல் எனத் தொடர்வது ஆரோக்கியமான ஜனநாயகமா என்கிற ஐயம் எழுகிறது. இங்கேஆளுக்கு ஆள் அபசுவரம் வாசிப்பதும்;மேலே தலைவரே இறுதி முடிவெடுப் பதுமே காங்கிரஸின் வாடிக்கை.
இங்கே அஇஅதிமுகவில் இன்று இருப்பவர் நாளை இருப்பார் என்ற உத்திரவாதமே இல்லாமல் எல்லோரையும் கொலுபொம்மைபோல் மாற்றிக் கொண்டேஇருப்பார் ஜெயலலிதா. நான்... நான்...என நொடிக்கு நூறுதடவை பேசு வதும்- அப்படியே சொந்தக்கடை முதலாளி போல் ஜெயலலிதா கட்சியை நடத்துவதையும் தமிழகம் அறியும்; இடையில் தேர்தல் கமிஷனின் கட்டளையை மதிப்பதாகக் காட்டிக் கொள்ள உட்கட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு பின்னர் நியமனங்கள், நீக்கங்கள், மாற்றங்கள் எல்லாம் தானடித்த மூப்பாக நடைபெறும். கூழைக் கும்பிடும் அடிமைத்தனமுமே விசுவாசமாகும் போது எல்லா அதிகாரமும்ஜெயலலிதாவுக்கே!
இதை எல்லாம் ஒப்பிடும்போது திமுகவில் உட்கட்சி ஜனநாயகம்இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொள்ள இடம்உண்டு. அவ்வப் போது உட்கட்சித் தேர்தலும் உருட்டுக்கட்டை மோதலும் அங்கே இன்னும் கொஞ்சம் உட்கட்சி ஜனநாயகம் ஒட்டியிருப்பதன் சாட்சிதான்; ஆயினும் இப்போது அறிவாலயத்தில் கட்டைப்பஞ்சாயத்து செய்து மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டதாய் அறிவிக்கிறார்கள். அங்கு குடும்ப ஆதிக்கம் என்பது பரமரகசியம் அல்ல.

கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உட்கட்சி ஜனநாயகத்தை உயிர்த்துடிப்புடன் பேணி வருகின்றது. 21வது அகிலஇந்திய மாநாட்டை நோக்கிகட்சியில் மாநாடுகள் நடந்து வருகின்றது. அப்படியெனில் இதுவரை 20 முறை உட்கட்சிமாநாடுகள் நடத்தப்பட் டுள்ளன. அதுவும் கிளை, பகுதி/வட்டம்/மாவட்டம், மாநிலம்எல்லா மட்டத்திலும் மாநாடுகள்நடக்கின்றன. ஆனால் அதுகுறித் தெல்லாம் செய்தியாவதில்லை.
பத்திரிகையாளர்களிடம் கேட்டால், “நீங்கள் கதவடைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் அங்கே என்ன நடந்தது என யாருக்குத் தெரியும்? தேர்தல் நடந்ததாகச் சொல்கிறீர்கள்! விபரம் இல்லையே!”என்கிறார்கள் .அவர்களைப் பொறுத்தவரை தேர்தல் என்றால் இவருக்கும் அவருக்கும் மோதல் - இவருக்கு யார்யார் வாக்களித்தார் - அவர் பக்கம் யார்யார் என்பதையெல்லாம் சொல்லி - அங்கும் இங்கும் தனிநபர் மோதலாக்கி - கோஷ்டியாக்கி அடித்துக் கொள்வதே ஜனநாயகம் போலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் நினைப்பது போல் இல்லையெனில் ஜனநாயகமே இல்லை என்கிறார்கள்.உண்மை என்ன?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லாமட்டத்திலும் தேர்தல் நடக்கிறது. நடைபெறும். அந்தந்த மட்டத்தில் தலைமைக்குழு புதிய தலைமைக் குழுவுக்கான முன்மொழி வை செய்கிறது; சிலர் போட்டியிடுகிறார்கள்; போட்டி யிடுவது தவறல்ல; கட்சி உறுப்பினரின் உரிமை; கோஷ்டி சேர்ப்பதுதான் தவறு. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல்நடைபெறுகிறது. போட்டியிட்டவர்கள் பல இடங்களில்எல்லாமட்டங் களிலும் வெற்றிபெறவும் செய்கின் றனர். அக்குழுகூடி செயலாளரைத் தேர்வு செய்கிறது.
எடுத்துக்காட்டாக மாவட்டக்குழு கூடி மாவட்டச் செயலாளரைத் தேர்வு செய்கிறது. போட்டியிடு வென்றவர்கள் ஊன்ஊ .அவர் மாவட்டக்குழுவின் செயலாளரே தவிர மாவட்டத்துக்கே அதிபதி அல்ல; மாவட்டக்குழுவே மாவட்டத்தின் தலைமை; கூட்டுத் தலைமை என்பது; கம்யூனிசநெறி.

உச்சபட்ச ஜனநாயகமும் ஆகும்.அதுமட்டுமல்ல கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும் அரசியல் அறிக்கை இரண்டு மாதத்துக்குமுன்பே சுற்றுக்கு விடப்பட்டு கீழி ருந்து மேல்வரை விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அவை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். கடந்த அகில இந்திய மாநாடுகோழிக்கோடில் நடைபெற்ற போது என்ன நடந்தது?
மாநாட்டு அறிக்கை மேலே குறிப்பிடப்பட்டது போல் வெளியிடப்பட்டு விவாதிக்கப் பட்டது. அப்போது “கட்சியின் 93,107 கட்சிக் கிளைகள், 5,733வட்டாரக் குழுக்கள், 971 பகுதி-வட்டக் குழுக்கள்,397 மாவட்டக் குழுக்கள், 22 மாநிலக்குழுக்கள், 4 மாநில அமைப்புக்குழுக்கள் என அனைத்து மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானத் திருத்தங் கள் மத்தியக்குழுவுக்கு மாநாட்டுக்கு முன்பே அனுப்பப்பட்டது.
அரசியல்தீர்மானத்திற்கு 3,713 திருத்தங்களும், 483 யோசனைகளும் அனுப்பப்பட் டிருந்தன. இதுபோக மாநாட்டில் பேராளர்கள்(பிரதிநிதிகள்) 326 திருத்தங்களையும் 33 ஆலோசனை களையும் வழங்கினர். இதுபோலதத்துவத் தீர்மானத்திற்கு 984 திருத்தங்களும் 86 யோசனைகளும்முன்கூட்டியே அனுப்பப்பட்டிருந் தன. மாநாட்டின்போது பேராளர்கள் 234 திருத்தங்களையும் 29 ஆலோ சனைகளையும் முன்மொழிந்தனர். இதன்மீது விவாதம் நடைபெற்றது. அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் பரிசீலனை அறிக்கைமீது நடைபெற்ற விவாதத்தில் 47 தோழர்கள் பங்கேற்று 472 நிமிடங்கள் கருத்துக்களை சொன்னார்கள். அதுபோல தத்துவத் தீர்மானத்தின் மீது 47 தோழர்கள் பங்கேற்று 472 நிமிடங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். இதுபோகஅரசியல் ஸ்தாபன அறிக்கையின் மீது 40 தோழர்கள் 390 நிமிடங்கள் கருத்துகளை எடுத்துச் சொன் னார்கள்.
ஆக இந்த மூன்று ஆவணங்களை சேர்த்து மட்டும் 1334 நிமிடங்கள் அதாவது 22 மணி நேரம்24 நிமிடங்கள் 134 தோழர்கள்கருத்துகளைச் சொல்லியிருக் கிறார்கள். ஏற்கனவே சுட்டியதுபோல மூன்று ஆவணங்களிலும் மொத்தமாக 5357 திருத்தங்களும், 633 யோசனைகளும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இப்போது நாம் சவால் விட்டுக் கேட்கிறோம். வேறுஎந்தக் கட்சியில் இவ்வளவு விரிவாக - இவ்வளவு பங்கேற்போடு - இவ்வளவு நுட்பமாக தொண்டர்களின் கருத்துகள் முழுமை யாக கேட்கப்படுகிறது, விவாதிக்கப் படுகிறது? உட்கட்சி ஜனநாயகம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வெறும் வார்த்தையல்ல. உயிரோட்டமுள்ள செயல்முறை. அதன் முழு சாட்சி தான் இவ்வளவு நெடிய விவாதம். இந்தமாநாட்டிலும் அப்படித்தான் நடக்கும்.

உட்கட்சி ஜனநாயகம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு நாள் கூத்தோ அடிதடியோ திருவிழாவோ அல்ல; அன்றாட நடைமுறையாக உள்ளது.கட்சிகுழுக் கூட்டங்கள் மற்றும் கிளைகளின் செயல்பாட்டிற்கும் உயிரோட்டமான ஒற்றுமைக்கும் அடிப்படையாக அமைவது விமர்ச னம் - சுயவிமர்சனமே.
“ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாக இருந்த நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, அதைச்சரிசெய்வதற்கான வழிமுறைகளைத்தீர ஆராய்வது - இவையெல்லாம் ஒரு தீவிரமான கட்சிக்குரிய அடையாளமாகும்”என்பார் லெனின். இதற்கு விமர்சனம் - சுயவிமர்சனம் என்பதே ஒரேவழி; ஆயுதம். இதனைஅனைத்து மட்டங் களிலும் எல்லா காலங்களிலும் பயன்படுத்தக் கட்சியின் செயல்பாட்டில் ஒரு அங்கமாக மாற்றியிருப்பதைவிட உயர்ந்த ஜனநாயகம் எங்கு உள்ளது?

அதுமட்டுமா? கட்சியில் எந்தமட் டத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனை எதிர்த்துமேல்முறையீடு செய்ய கட்டுப்பாட் டுக்குழு [control
commission] மாநில, அகில இந்திய மட்டத்தில் உண்டு; இது சுயேட்சையான அமைப்பு. அதுபோல் கேட்கப்படாமலுள்ள குறைகளை கேட்கச்சொல்லி நேரடியாக முறையிட - புகார்களை நேரடியாக முறையிட சுயேட்சையான ஒழுங்குநடவடிக்கைக்குழு [deciplinary committee] எனும் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது .கட்சிக்குள் தோன்றும்தனிமனித மற்றும் அமைப்பு ரீதியான குறைபாடுகளை போக்க நெறிப்படுத்தும் இயக்கமும் நடத்தப்பட்டது;
அதுவும் தொடர்முயற்சியே. உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த லெனின், ஸ்டாலின், மாசேதுங், லீயோசூச்சி, சுந்தரய்யா,இஎம்எஸ் எனப் பலரும் தயாரித் தளித்த நூல்கள்; ஆவணங்கள் பல. ஆக உட்கட்சி ஜனநாயகம் என்பதை மாநாட்டுக்கு மாநாடு மேலும் மேலும் வலுப்படுத்தி வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே என்பதை ஊரறிய உலகறிய நெஞ்சு நிமிர்த்தி உரக்கச் சொல்லுவோம்.

தீக்கதிர் 4 ஜனவரி 2015
1 comments :
உட்கட்சி ஜனநாயகம் எனும் என்னுடைய கட்டுரைக்கு பெரும் வரவேற்பு நல்கிய அனைவருக்கும் நன்றி . அகில இந்திய மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் உட்கட்சி விவாதத்திற்காக வெளியிடப்படும் அரசியல் தீர்மானம் அவரவர் தாய்மொழியில் கிடைக்கும்படி செய்யப்படுகிறது என்பதையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும் என தோழர் ஏ.கே .பதமநாபன் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது . அது போல் தோழர் ச.தமிழ்ச்செல்வன் கீழ்கண்ட கருத்தை இணைத்துள்ளார் , “ அத்தோடு இன்னொன்றையும் சொல்லலாம்.அகில இந்திய கட்சித்தலைவர் என்ற பதவியே மார்க்ஸிஸ்ட் கட்சியில் கிடையாது.அரசியம் தலைமைக்குழுதான் வழிகாட்டும் குழு.மார்க்சிஸ்ட் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துவது என்பது ஒரு வேலைப்பிரிவினை மட்டும் என்கிற புரிதலும் நடைமுறையும் உள்ளது.அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்|.”
Post a Comment