எல்லா
சுதந்திரங்களோடும்…….
எவ்வித சுதந்திரமுமின்றி..
சு.பொ.
அகத்தியலிங்கம்..
தமிழ்
செம்மொழி . இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலான பழமையும் இலக் கியப் பெருமையும் உடையது
. சுமார் ஐநூறு (?) ஆண்டு மட்டுமே பழமையா
னது மலையாளம் . ஆயினும் சில மலை யாளப் படைப்புகளை படிக்கும் போது இது போன்ற படைப்புகள்
தமிழில் எப் போது வரும் என ஏங்கவைக்கிறது .
சென்னை
புத்தகக் கண்காட்சியில் வம்சிபதிப்பகத்தைபார்வையிட்டபோதுகே.வி .ஷைலஷா தான் மலையாளத்திலிருந்து
தமிழாக்கம் செய்த மூன்று நூல்களை எனக்களித்தபோது நினைவலைகள் பின்னோக்கி குமிழியிட்டன
.
துப்பறியும்
கதைகளைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த மாணவப் பருவத்தில் குரோம்பேட்டையில் அறிமுக
மான நூலகப் பெரியவர் அனந்த நாரா யணன் என்னிடம்
சில மலையாள மொழி பெயர்ப்பு நாவல்களைக் கொடுத்தார் . அவை என் ரசனையை மாற்றிப்போட்டு
விட்டன. மின்சார ரயிலில் பழக்கம் ஏற்பட்ட தூக்குமேடைசி.ஏ.பாலன்
மலையாள மொழிபெயர்ப்பு மட்டுமல்ல வங்கம்
, கன்னடம் , தெலுங்கு உட்பட பல மொழி யாக்கங்களை
என்னுள் செலுத்தினார் . உலக இலக்கியங்களையும் படிக்க தூண்டுகோலானார் . இந்த இலக்கிய
வாசிப்பு பெரியார்பக்தனாக இருந்த என்னை சிவப்பு சிந்தனை நோக்கி நகர்த்தியது . அவசரகாலத்தில் பி.ஆர் .பரமேஸ்வரன் மொழியாக்கம் செய்த
கையூர் தியா கிகள் வரலாற்றோடு பிணைந்த “நினை
வுகள் அழிவதில்லை”என்னும் உயிர் காவி யம் உள்ளத்தை இன்றும் நிறைத்திருக் கிறது .
சூர்ப்பனகை ,சர்மிஷ்டா ,சுமித்திரா எனும் புராண கதாபாத்திரங்கள் பெயரில் மூன்று நூல்கள் ; அதேசமயம் தற்கால வாழ்வை ஆழமாகவும் நுட்பமாகவும் இவை ஊடுருவிப்பார்ப்பது நேர்த்தியா
னது . “ மூக்கும் முலைகளும் அறுக்கப் பட்ட
சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதும் மரியாதை இருந்தது. சரித் திரத்தின் ஆரம்பக்
குறியீடாகச் சூர்ப்ப னகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண்விடுதலை”கே.ஆர்.மீரா
வின் சூர்ப்பனகை சிறுகதையில் அனகா கேட்பது எவ்வளவு பொருள்பொதிந்தது.
“கடவுளே
எனக்கு மட்டும் அந்த ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதேன் ?” என ‘இத யம் நம்மை ஆக்கிரமிக்கிறது’
சிறுகதை யில் சாவித்திரி அம்மாள் வேண்டுவது ஆணாதிக்க சமூகத்தின் மீது சவுக்க டியாய்
வீழ்கிறது. குடும்பத்தினர் தன்னை கவனிக்க வேண்டுமானால் தனக்கு ஹார்ட் அட்டாக் வரணும்
என யோசிப்பது; எவ்வளவு ஆழமாக புரையோடியிருக்கிற சமூகப் புண்ணின்
குறியீடு ... எப்படி இவர்களால் மட்டும் இப்படி இதயத்தை ஊடுருவிப் பார்க்க முடிகிறது
..
முன்னாள்
நக்சலைட் சரசம்மா வோடு உரையாடல்;
அது ஒரு டிவி தொட ருக்கான நிகழ்ச்சித் தயாரிப்பு .பேரனைத் தாலாட்டும்
அம்மம்மா சரசம்மா , “குழந்தை
பைஜூ பாக்கியவான் . மற்ற பிள்ளைகள் யாரும் கேட்க முடியாத பல கதைகளை தன் அம்மம்மாவிடமிருந்து
அவன் கேட்கமுடியும் " எவ்வளவு கூர் மையான அவதானிப்பு . சமகால
அரசியலும் கலைபொக்கிஷமாக முடி யும் என்பதை எஸ்.எஸ்.மாதவனின் சர்மிஷ்டா சிறுகதைத் தொகுப்பின்
முதல் கதையே பறை சாற்றுகிறது . முன்னுரை யில் சொல்லியிருப்பதைப்போல , “ ஏதோ வாழ்கிறோம் என்று மட்டும் சொல்லிக் கொள்ளும் பெண்களின் மன உணர்வுகளோடு
உறவாடி இருக்கிறார் ”மாதவன் . அந்தத்துறையில் நாம் வெகு தூரம் போகவேண்டியுள்ளது.
“ சுமித்திரா
இறந்துவிட்டாள். இந்த ஒரு வரி தான் மொத்த நாவல் . இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு
பெண்ணின் முழு வாழ்க்கை அடங்கியிருக்கிறது ” என்கிறார் சுமித்ரா நாவலின் முன்னுரையில்
எஸ். ராமகிருஷ்ணன் . 120 பக்கத்தில் முழு நாவலும் அடங்கி விடுகிறது . சிறு கதை , நாவல் என்பது எத்தனை பக்கம்
என்பதிலா இருக்கிறது ? சாவு வீட்டுக் குள் ஒவ்வொருத்தர் மனவோட்டமும்
எப் படியிருக்கும் ! அடடா ! இப்படியும் மனதை வாசிக்க முடிந்தால் ..கற்பனையில் படிக்
கும் போது நன்றாகத்தான் இருக்கும் நிஜத்தில் இப்படி சாத்தியமானால் ...பெரும் குழப்பம்
நேருமோ ?
“அளவாய்
செதுக்கப்பட்ட / கண் ணாடித் தொட்டிக்குள் /கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன் / தினம்
தினம் அக்க றையோடு / சுத்தம் செய்யப்படும் தண் ணீர் / பதப்படுத்தப்பட்ட செடிகொடிகள்
/ தேடி அலையாமல் வாய்க்குள் / வந்து விழும் உணவு / தேவையைச் சரியாய்ப் புரிந்துகொண்டு
/அளிக்கப்படும் பொழுது போக்குகள் / என் இருத்தல் பார்ப்பவர்க ளுக்கு / நான் கொடுக்கும்
சந்தோஷம் / அழகாய் வளைந்து நெளிந்து / பொன் நிறத்தில் மின்னி / வாலசைத்து தலைய சைத்து
/சந்தோஷம் காட்டுவதாய் / எல்லா சுதந்திரங்களோடும் / எவ்வித சுதந்திரமுமின்றி ”
-சூர்ப்பனகை
முன்னுரையிலும் கதையோட்டத்திலும் கலந்து நிற்கும் இக்கவிதை புதிய சாளரங்களைத் திறக்கிறது
. பாரதி புத்தகாலயம் வெளி யிட்ட சத்யஜித்ரேவின்
ஃபெலுடாக் கதை வரிசையை பற்றி எழுதுகிறபோது தமிழில் இதுபோல் ஏன் முயற்சிகள் இல்லை
என எழுதினேன் . இப்போது இம் மூன்று நூல்களும் அதேபோல் கேட்கத் தோன்றுகிறது . எட்டுத்திக்கும்
சென்று அரிய பொக்கிஷங்களைத் தமிழில் கொண்டு சேர்க்கும் அரும்பணியை வம்சியும் ஷைலஜாவும்
தொடரட்டும். இது போன்றவற்றை படித்துக் கிரகித்தும் தமிழில் புதிய ஊற்றெடுக்கட்டும்
!
நன்றி : தீக்கதிர் , இலக்கியச் சோலை 17-02-2014
0 comments :
Post a Comment