நரம்புகளை முறுக்கேற்றும் சிந்தனை கூரேற்றும்

Posted by அகத்தீ Labels:

 
 
 
 
 
நரம்புகளை முறுக்கேற்றும் 
சிந்தனை கூரேற்றும்
 
சு. பொ. அகத்தியலிங்கம்

 "வரும் அவரது தலை முறை யினரும் எங்களுடன் இல்லாது போகும் ஒரு நாள் வரும்போது , அந்த சிந்தனைக ளையும் கோட்பாடுகளையும் தம்மு டையதாக கியூப மக்கள் மாற்றியிருப் பார்கள்  என நான் நிச்சயமாகக் கூறுகி றேன் ." என அணிந்துரையில் ஃபிலிப் பெரொஸ் ரோக் கூறியிருப்பது கவனத்திற்குரியது . அந்த சிந்தனை களை நாம் அறிய இந்த 28 காப்பிய உரைகளும் உதவும் எனில் மிகை அல்ல . 5000க் கும் மேற்பட்ட  உரைகளி லிருந்து இந்த 28 உரைகளை தேர்வு செய்திருப்பதொன்றே இதன் முக் கியத்துவத்தை உரைக்கப் போதுமா னது. நூலின் தலைப்பே உள்ளடக் கத் தையும் வீச்சையும் தன்னகத்தே கொண்டிருக்கும் போது நூல் அறி முகமொன்று தேவையா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது ; ஆயி னும் யாம் பெற்ற இன்பத்தை வாசகர் கள் பெற விண்டுரைப்பது வழக்கம் தானே!!
 
90 பக்கம் கொண்ட முதல் உரை  வரலாறு என்னை விடுதலை செய் யும் என்பதாகும். மன்கடா தாக்குத லில் கைதாகி பாடிஸ்டா என்கிற ராணுவ சர்வாதிகாரியின் விசாரணை கொட்டடியில் காஸ்ட்ரோ சிங்க மென சிலிர்த்து வாதிட்ட உரை - 36 ஆண்டுகளுக்கு முன் வீ.பா.கணே சனின் சீரிய மொழிபெயர்ப்பில் படித்தது . மீண்டும் படிக்கும் போதும் அதே உத்வேகம் . இளைய தலை முறை அவசியம் வாசிக்க வேண்டிய  உரை.
 
புரட்சி என்றால் என்ன ? கியூபப் புரட்சி எப்படி நிகழ்ந்தது ? எவ் வாறு பாதுகாக்கப்படுகிறது ? முதலா ளித்துவம்எத்தகையது?அமெரிக்கப் பேரரசு எவ்வளவு வஞ்சகமானது , கொடியது ?அணிசேரா இயக்கம் ஏன் ?கோரிக்கைகள்  எவை ? இப்படி எழும் பல கேள்விகளுக்கு எளிமையாய் , உணர்ச்சிகரமாய் , மலைக்க வைக்கும் புள்ளிவிபரங்க ளுடன் இந்நூல் பதில் சொல்கிறது. காஸ்ட்ரோவின் வரலாற்றுப் புரித லும், தத்துவத் தெளிவும்,  மக்கள் மீதான அசைக்க முடியாத பற்றும் நம்பிக்கையும் அடடா ! அடடா! நரம்பை முறுக்கேற்றும் சிந்தனை யைக் கூரேற்றும் உரைகள் எனில் மிகை அல்ல.
 
 " இன்று உலகம் ஓர் போர்க்களம் எல்லா இடங்களிலும் எல்லா கண்டங் களிலும் , எல்லா நிறுவனங்களிலும் , எல்லா அமைப்புகளிலும் அது போர்க் களமாகவே உள்ளது ."  என்கிற காஸ்ட் ரோ ,அதனை எதிர்கொள்ள சிந்தனை யை வளப்படுத்துவதும் வலுப்படுத்துவ தும் மிக மிக அவசியம் என்கிற திசை யில் மக்களை சிந்திக்கச் செய்ய ஆற்றிய உரைகள். இவை நம்மையும் சிந்திக்கச் செய்யும்.
 
 "ஒவ்வொரு புரட்சியாளரின் கட மையும் புரட்சி செய்வது .  அமெரிக் காவி லும் ஏன் உலகம் முழுவதிலும் புரட்சி வென்றே தீரும் என்பதுவும் அறிந்ததே ! ஆனால் தமது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏகாதிபத்தியத் தின் சடலம் நம்மைக் கடந்து செல்லுமென காத்துக்கிடப்பது புரட்சியாளனின் வேலை அல்ல" என்றார் . அதே சமயம் அவரின் கனவு என்னவாக இருந்தது ?
 
 "நாங்கள் கம்யூனிச சமூகத்துக்காக மட்டும் ஆசைப்படவில்லை அனைத்து நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப்படுகி றோம் .  எந்த நாட்டுக்கும் ரத்து அதிகா ரம் இல் லாத ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப் படுகிறோம் . முதலாளித்துவ உலகம் உள் முரண்பாடுகளால் கிழிந்து போயிருப்பது போன்ற சித்திரத்தை நாளைய கம்யூனிச உலகம் அளிக்காது . அனைத்துபெரிய, சிறிய நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ,சுதந்திர நாடுகளைக் கொண்ட சுதந் திர சமூகம்தான் எமது நம்பிக்கை ." அதை உறுதிப்படுத்துவன தாம்இவ்வுரைகள்.
சாதாரணமாக நெடிய உரைகள் அலுப்பூட்டும் ; அதிலும் புள்ளிவிப ரங்கள், வரலாற்றுத்தகவல்கள் நிரம்பிய உரை எனில் கொட்டாவியை வரவழைத் துவிடும் ; ஆனால் புள்ளிவிவரங்களைக்  கூட உணர்ச்சியை கொம்பு சீவும் விதத் தில் சொல்ல முடியும் - வரலாற்றுத்தக வல்களை எழுச்சியூட்டும் விதத்தில் விவரிக்க முடியும் - நெடிய உரை மூலம் கேட்ப வரை தன் சிந்தனை யோட்டத்தோடு இயக்க முடியும் என நிரூபிப்பவை காஸ்ட் ரோவின் உரைகள் . ஆனால் ஒரு பெரும் ரகசியம். உண்மைகளின் அணிவகுப் பாய் அவர் உரை அமைவதால் உள்ளத்தை அவரால்  கொள்ளையடிக்க முடிந்தது .நான் இவ்வுரைகளில் என்னைப் பறி கொடுத்தேன்.. நீங்களும் பறிகொடுங் கள்.. எடுத்துக்காட்டாக ;
 
"..உலகில் இராணுவச் செலவு 300 பில்லியன் டாலரை விடவும் அதிகம் . 300 பில்லியன் டாலர்களைக் கொண்டு 400 மில்லியன் குழந்தைகளுக்காக 6,000, 000 பள்ளிகளை கட்ட முடியும் ; 300 மில்லியன் வசதியான வீடுகளைக் கட்ட முடியும் ; 18 மில்லியன் படுக்கைகளைக்  கொண்ட 30,000 மருத்துவமனைகளைக் கட்டமுடியும் ; 20 மில்லியன் தொழிலாளர் களுக்கு வேலையளிக்கக் கூடிய 20,000 தொழிற்சாலைகளை கட்ட முடியும் ; அல்லது 150 மில்லியன் ஹெக்டேர் நிலத் துக்கு பாசன வசதி அளிக்கலாம் ;அதைச்  சரியான தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கினால் ஒரு கோடி மக்களுக்கு உணவளிக்கலாம் . மனித இனம் இவ் வளவு பெரிய தொகையை ஓவ்வொரு வரு டமும் இராணுவச் செலவில் வீணடிக் கிறது ."
 
அவர்  யாருக்காகப் பேசினார் ? கேளுங் கள் ; " இந்த உலகில் ஒரு கவளம் சோறு  கூட கிடைக்காத குழந்தைகள் சார்பாக நான் பேசுகிறேன் . மருந்து கிடைக்காத நோயாளிகள் சார்பாக பேசுகிறேன் . உயிர் வாழும் உரிமையும் மரியாதையும் மறுக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுகி றேன் ." இதைவிட தெளிவாக எப்படிக் கூறுவது ?
இன்னும் விளக்கமோ, விவரமோ விண்டுரைத்தலோ தேவையா ? யாருடைய பரிந்துரையும் தேவைப்படா மலே வாசகனைத் தூண்டும் நூலுக்கு ஏன் அறிமுகம் ?



ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்,
தமிழில் : கி. ரமேஷ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
421 , அண்ணா சாலை , தேனாம் பேட்டை, சென்னை - 600 018 .
பக் : 672 , விலை : ரூ .420/- 

0 comments :

Post a Comment