திருமண நாளில்...

Posted by அகத்தீ Labels:





திருமண நாளில்...

இன்று நான் சி.கலாவதியை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட இனிய நாள் . சென்ற ஆண்டு இதே நாளில் பதிந்ததை திரும்பவும் அசைபோடுகிறேன்
[ கீழுள்ள சுட்டியை அமுக்கி அதனை வாசிக்க வேண்டுகிறேன் ]


மகன் திருமணம் சாதிமறுப்பு காதல் திருமணமாய் நடந்தேறியது  ; இந்த ஓராண்டில் என் வாழ்வில் முக்கிய நிகழ்வாகும்

மகன் மருமகளோடு பெங்களூர் சென்றுவிட்டோம் ; எனினும் என் சமூகப்பணியும் பத்திரிகையாளர் பணியும் சென்னையும் பெங்களூருமாய் மாறிமாறித் தொடர்கிறது .

கழுத்தை நெரித்த சிக்கல்களிலிருந்து பெருமளவு விடுபட்டுவிட்டோம் .
வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறபோது இயன்றவரை ஒரு நேர்மையாக லட்சியபூர்வமாக வாழ்ந்திருக்கிறோம் .தவறுகளும் பிழைகளும் போராட்டங்களும் இல்லாமல் வாழ்க்கை இல்லை . நாங்களும் விதிவிலக்கல்ல . ஆயினும் திரும்பிப் பார்க்கும் போது மனத்திருப்தி இருக்கிறது . அதுதான் எம் வாழ்க்கை வெற்றி எனபதன் அளவுகோல் .

வாழ்க்கையில் முக்கால் பகுதியைத் தாண்டிவிட்டோம் .மீதமுள்ள பகுதியையும் சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் பயனுள்ளபடி நிச்சயம் தாண்டுவோம்..

மகள் ,மகன் , மருமகன் , மருமகள் , பேரன் , பேத்தி எல்லோரும் அன்பைப் பொழிகிறார்கள் ; தோழமையும் நட்பும் சூழ நிற்கிறது ;கட்சி [ சிபிஎம்] வாழ்வும் குடும்ப வாழ்வும் முரணின்றி தொடர்கின்றது ;பதவிப் பொறுப்புகளிலிருந்து சுயமாக விலகிக் கொண்டாலும் சமூகப் பொறுப்பையும் லட்சியக் கடமையையும் ஒல்லும் வகையெல்லாம் ஆற்றுகிறோம் .

32 ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கைத் துணை என்பதுதான் சரியான சொல்லாட்சியாகவும் ; அன்றையப் புரிதலாகவும் இருந்தது ; இன்றைக்கு வாழ்க்கை இணையர் என்கிற சமுத்துவப் புரிதலாகவும் சொல்லாட்சியாகவும் பரிணமித்துள்ளது . ஆம் , எம் வாழ்விலும் அப்படித்தான் .
பசுமையான நினைவுகளோடும் வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களோடும் பயணம் தொடர்கிறோம் .  

வாழ்த்திய நெஞ்சங்கள் அனைத்திற்கும் நன்றி .

1 comments :

  1. திண்டுக்கல் தனபாலன்

    மிகவும் மகிழ்ச்சி ஐயா... குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Post a Comment