போயிட்டு
வாங்க சார் ! குட் பை மிஸ்டர் சிப்ஸ் ,ஆசிரியர் : ச.மாடசாமி,வெளியீடு :
புக்ஸ் ஃபார் சில்ரன் ,பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை ,
சென்னை - 600 016 .பக் :64 , விலை : ரூ . 35
“ஆசிரியராக
வாழ்வதென்றால்..?
தொடர்ந்து வாசிக்கிறவர்தான் ஆசிரியர் என்கிறார்கள் . இது
ஒரு விதத்தில் சரியாக இருக் கிறது . அதேநேரம் இலக்கணம் போல் கனமாக
இருக்கிறது. எல்லோரும் தூக்கமுடியாதகனம்.தொடர்ந்து மாணவர்களோடு உறவு
வைத்திருக்கிறவர்தான் ஆசிரியர் என்பது சிப்ஸ் வாழ்க்கை முன்வைக்கும் வாதம் .
இந்த வழி காட் டுதல்கனமற்றுஇலகுவாகஇருக்கிறது.யாவர்க் கும்
கைகூடக்கூடிய வித்தையாக இருக்கிறது ”மேலே சொன்ன அனைத்தும் ச. மாடசாமி
எழுதிய போயிட்டு வாங்க சார்!.. குட் பை மிஸ் டர் சிப்ஸ் என்ற 64 பக்க
சிறிய புத்தகத்தில், நெஞ்சை நெகிழவைக்கும் புத்தகத்தில் இடம்
பெற்றவரிகள்.மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரி யராக வாழ்ந்த சிப்ஸின்
கதையே இந்நூல். சிப்ஸ் என்கிற சிப்பிங்கை கதை நாயகனாக வைத்து ஜேம்ஸ்
ஹில்டன் 1933 ல் எழுதியது . 1934 ல் நூலாகவும் வெளிவந்தது.
திரைப்படமாகவும்
வெற்றி பெற்றது.“ அதிகாரம் எப்போதும் கசப்பை அல்லவா விதைக்கிறது
?.....ரிசல்டை குறிவைக்கும் திற மைசாலிகள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால்
அவர்கள் நேசிக்கப்படுவதில்லை ”ஆஹா !! ஆயிரம் பொன் பெறும் முத்திரை
வாக்கியமன் றோ இது . அதுவும் கல்வி வெறும் கடைச் சரக்காக் கப்பட்டுவிட்ட
இன்றைய சூழலில் இதன் வீரி யம் அளவிடற்கரியது. சிப்ஸ் மாணவர்களால்
நேசிக்கப்படவர் .அவர் கதை நமக்கு எளிய சாளரங்களைத் திறந்து அன்பெனும் தென்ற
லின் சுகத்தை அனுபவிக்கச் சொல்கிறது .
“சிப்ஸ் திறமைசாலி இல்லை .
அக்கறை உள்ளவர். திறமை கொண்டவர்கள் மேடைக ளிலும் பொறுப்புகளிலும்
அமரும்போது அக் கறை உள்ளவர்கள் பிறர் மனங்களில் அமர்கி றார் கள் . அப்படி
அமர்ந்திருப்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை . ” அப்படி
வாழ்ந்த சிப்ஸ் முன்னுதாரணமாய் ரோல்மாட லாய் நம் நெஞ்சுக்குள் நிறைகிறார் .
இதயத் தோடு உரையாடும் இந்நூலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள் ; மாடசாமியோடு
நீங்க ளும் சிப்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவீர்கள்
.-
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment