‘ப
ட்டினிச்சாவு’ என்ற வார்த்தை ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காது. “சத்துணவுக்
குறைவால் மரணம்” என வித்தாரம் பேசுவார்கள். ஒரிசா காளகந்தியில் அதுதான்
நடந்தது.அதுபோல் “கடன் தொல்லை தாளாமல் விவசாயி தற்கொலை” என்ற வார்த்தை
ஆட்சியாளர்களை மிரட்டும்; “வயிற்று வலி தாங்கா மல் தற்கொலை” என பூசி
மெழுகப் பார்க்கும்.தொற்றுநோய்கள் மீண்டும் படையெடுக்கும்போதும் புள்ளி
விபரங்களை சாதுரியமாய் மாற்றி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சத்தியம்
செய்வார்கள் ஆட்சியாளர்கள்.
காசநோய், சயரோகம், எலும் புருக்கி நோய் என பல
பெயர்களில் அழைக்கப்படுகிற டி.பி.நோய் இன்னும் கொடூர உயிர்க்கொல் லியாகவே
மூன்றாம் உலக நாடு களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
(டோட்டலி டிரக் ரெசிஸ்டன்ட் டிபி) எனப்படு கிற “மருந்துக்கு
முழுமையாக கட் டுப்பட மறுக்கிற காசநோய்” பெருகிவிட்டது என பொது சுகா தார
நிபுணர்கள் கவலை தெரிவிக் கின்றனர். ஆனால் அரசு அந்த வார்த்தையையே சொல்லக்
கூடாது. உலக சுகாதார நிறுவன மும் இந்த சொல்லை ஏற்கவில்லை. வேண்டுமானால் டிபி(எக்ஸ்டென்ஸ்சிவ்லி டிரக் ரெசிஸ்டன்ட் டிபி)
அதாவது “மருந்துக்கு பெருமளவு கட்டுப் படாத டிபி” என்று மட்டுமே கூற
வேண்டும் என்கிறார்கள் ஆட்சி யாளர்கள்.விதவிதமான கொசுவர்த்திச் சுருள்கள்,
மருந்துகளோடு வாழப் பழகிக் கொண்ட கொசுக்கள் போல; ஏற்கெனவே கொடுத்த
மருந்துகளுக்கு காசநோய் கிருமி கள் கட்டுப்பட மறுக்கின்றன என பாமரர்
நோக்கில் புரிந்து கொள் வதில் தப்பில்லை.
ஆனால் இந்த உண்மையை
அரசு ஏன் ஏற்க மறுக் கிறது என்பதுதான் அரசியல் கேள் வியாகும்.
மும்பை
பி.டி.ஹிந்துஜா மருத்து வமனையில் 12 நோயாளிகள் இவ்வாறு
கண்டறியப்பட்டதாகவும் அதில் 4 பேர் இறந்துவிட்டதாகவும் ஏனையோர் நிலையும்
அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் ‘பிரண்ட் லைன்’ ஏடு (ஜூலை 27) தகவல்
தெரிவிக்கிறது.
இந்தியாவில் பின் பற்றப்பட்டு வரும் பல்மருந்து சிகிச் சை
(மல்டி டிரக் ரெசிஸ்டண்ட்) பயன் இழந்து வருவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
ஆயினும் ஆட்சியா ளர்கள் விழிக்க மறுப்பது ஏன்?“ஒவ்வொரு இரண்டு நிமிடத்
திலும் இரண்டு காசநோய் நோயா ளிகள் உயிரிழக்கின்றனர்” என்ற பழைய
புள்ளிவிபரம் பெருமளவு மாற்றமின்றி இன்றும் தொடர்வது தான் வேதனை.உலக
காசநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். ஏறத்தாழ 40 விழுக்காடு
இந்தியர்கள் காச நோய் பாதிப்புக்கு ஏதோ ஒரு வகை யில் ஆளாகியே உள்ளனர்.
உலகம் முழுவதும் காசநோயால் பலியாகும் 94 லட்சம் பேரில் 20 லட்சம் பேர்
இந்தியர்கள். காசநோய் சாவில் உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது
என்பதுதான் வேதனை.பெரும்பாலும் காசநோய் பாதிப்பு என்பது
வறுமையும் சத்து ணவு இன்மையும் சுகாதார வசதி இன்மையும் மிகுந்த மூன்றாம்
உலக நாடுகளில் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில் லை. பீடி, சிகரெட்,
பஞ்சாலை, சுரங் கம் போன்ற, காசநோய் நோய்த் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள
தொழில்கள் பெரும்பாலும் மிகவும் பின்தங்கிய நாடுகளில்தான் தொடங்கப்படும்
என்பதும்; தொடர் கிறது என்பதும் கசப்பான உண்மை.
மூலதனம் என்பது இரத்தம்
குடிக்கும் காட்டேரி என்று மார்க்ஸ் சொன்னது மெய்யன்றோ? இந்த தொழிற்சாலையை
ஒட்டி காசநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற விதி காற்றில்
பறக்க விடப்பட்டு வெகுநாளாயிற்று
.மேலும் மருத்துவத்துறையில் ஆதிக்கம்
செலுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த 50 ஆண்டு களாக காசநோய்க்கு புதிய
மருந்து எதையும் கண்டுபிடிக்கவே இல்லை. அந்த திசை வழியில் கூட எட்டிப்
பார்க்கவில்லை என்பது கவலை அளிக்கும் செய்தியாகும்.செக்ஸ் மாத்திரைகள்,
டானிக்குகள் என விதவிதமாக ஆராய்ச்சி செய்து குவிக்கும் இந்த பன்னாட்டுக்
கொள்ளைக்காரர்கள் இந்த உயிர்க்கொல்லி நோய் குறித்து ஏன் கவலைப்படவில்லை.
முதற்காரணம்,
மூன்றாம் உலக பஞ்சைப் பராரிகள்தானே இதில் பெருமளவு பலியாகிறார்கள். ஆகவே
செத்துத் தொலையட்டும் என்கிற ‘விசால மனசு’ பன்னாட்டு நிறுவனங்களின்
பிறவிக்குண மாகும்.
அடுத்து, புதிய மருந்து ஆராய்ச்சிக்கு பல கோடி செல
வழித்த பின் ஒன்றுக்கு பத்தாய் அதை லாபமாக மீட்க அதிக விலை வைக்கணும்;
அவ்வளவு விலை வைத்து அடித்தட்டு மக்களிடம் விற்பது சிரமம். அரசும் இதில்
பெருமளவு பணமுதலீடு செய்யாது. பொது சுகாதாரத்திற்கு அரசு முதலீட்டை குறைக்க
வேண்டும் என்பது உலக வங்கிக் கட்டளை வேறு. காசுள்ளவனுக்கே இனி வைத்திய
வசதி என்கிற போது, காச நோயால் பாதிக்கப்படும் கஞ் சிக்கு இல்லாதவன் பற்றிய
கவலை எதற்கு என்று பன்னாட்டு நிறு வனங்கள் கேள்வி கேட்கவில்லை, செயலில்
காட்டுகிறார்கள்.
பஞ்சத்தில் நோயில் பாரதர் புழுக் களாய் சாதல் கண்டும்
தடுக்க முயற்சி செய்யாமல் வாயைத் திறந்து சும்மா வந்தே மாதரம் என்று
முழங்கும் நடிப்பு சுதேசிகள் குறித்து பாரதி சாடினான். ஆனால் ஆட்சியாளர்கள்
கொள்கையே அதுவாகிப் போனது.இல்லை யென்றால் அணுகுண்டுக்கும்
அர்த்தமற்ற யுத்தவெறி முஸ்தீபு களுக்கும் பணமுதலைகள் கொழுக்கவும்
கோடிகோடியாய் கொட்டி அழும் இந்திய அரசும், மாநில அரசுகளும் தொற்று நோயை
குணப்படுத்த புதிய ஆய்வு களுக்கு நிதி ஒதுக்கி இருக்க லாமே!
சிறந்த
மூளைவளம் மிக்க இந்திய ஆய்வாளர்களுக்கு அரசு ஊக்கம் கொடுத்து காசநோய்
தடுப்பில் புதிய மருந்துகளைக் கண் டறியச் செய்து, உலகுக்கே வழங்கி
இருக்கலாமே! இதற்கெல்லாம் அரசியல் உறுதி வேண்டும். வல் லரசுக் கனவு
பயன்தராது. மக்கள் நலன் பேணும் அரசாக மாற வேண் டும். மாறுமா? “தானாய்
எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்றான் பட்டுக்கோட்டை. காச நோய்க்கு
எதிரான மருத்துவ விழிப்புணர்வு ஒருபுறத்தேவை. காசநோயை அடியோடு ஒழிக்க
உறுதிமிக்க அரசியல் போராட்டம் பெருமளவு தேவை.
0 comments :
Post a Comment