ஓய்வும் விருப்ப ஓய்வும்....

Posted by அகத்தீ Labels:

ன்பான தோழர்களே!


வணக்கம்.


நாகை சென்றதால் கடந்த சில நாட்களாக முகநூலில்-வலைப்பூவில் உங்களோடு உரையாட முடியவில்லை.இப்போது மீண்டும் பயணம். புதிய உற்சாகத்தோடு..ஆம்.


உங்களுக்கு நினைவிருக்கிறதா 2011 ஜுன் 15 எனது 59 வது பிறந்த நாளையொட்டி[58வயது நிறைவு] வாழ்க்கையில் முதன் முதலாக பிறந்த நாள் செய்தியை எழுதினேன். ” ஓய்வெனப்படுவது யாதென”கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தேன்.அதில் எழுதியவைகளை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்.

இந்த முறை என் பிறந்த

நாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்

நண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ

இன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது

வாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது

பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்

எப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு

முன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா?

இல்லையா?இன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.



எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? எதிலிருந்து ஓய்வு?எப்போதிலிருந்து ஓய்வு?உடல்

தளர்ந்துவிட்டதா? உள்ளம் சோர்ந்துவிட்டதா?வாழ்வின் தேவைகள்

நிறைவாகிவிட்டதா?இலக்கை எட்டியாயிற்றா?மனம் சாந்தியாகிவிட்டதா?இப்படி பல

கேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில

பதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது

குறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்

கலைத்

தவிர குடும்பத்துக்குள்  பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்

இணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்கடியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.

உடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை

உணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக

பணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை

சூழ்ந்துள்ளதை என்னாலும் மறைக்கமுடியவில்லை-சுற்றியுள்ளோ

ரும்

அவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு

வந்துள்ளேன்.இது சரியா? தவறா? காலம்தான் தீர்ப்பெழுதும்.



என்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது

சும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்

கரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு

தோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்

எதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்

பண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட

அந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;

அச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க

முடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.



உடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு

ஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;

விஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது

வாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா?அதிலும் அரசியலில்

ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு

ஓய்வே கிடையாதா?விவாதத்திற்குரியது...



ஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி

பொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க

வேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -

எழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்

விசாலமாகவேண்டும்.



என் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு

பெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்

விரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்

பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்

அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்

எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து

கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும்  என்னுள் தகிக்கும்

உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்



ஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்

எந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்

இயன்றவரை கரைந்துபோகவே விரும்புகிறேன்.கைகூடுமா



ஓய்வெனப்படுவது யாதெனில்.
...


கட்டுரையில் நான் விழைந்தபடி பயணிக்கத் துவங்கிவிட்டேன்.ஆம்.நாகையில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் என் விருப்பத்தை வேண்டுகோளை ஏற்று மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளனர்.மாநிலத்தலைமைக்கு நெஞ்சம் நிறந்த நன்றி.சுருக்கமாகச் சொன்னால் பெரும் பொறுப்பிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்.ஆயினும்  தீக்கதிரில் சில கடமைகள் தற்போது உள்ளன.படிப்படியாக அதிலிருந்தும் ஒய்வுபெறுவேன் எனகிற நம்பிக்கை துளிர்க்கிறது.

அறுபதாவது வயதை நிறைவு செய்யும் போது இப்போது ஆற்றுகிற பணிகள் அனைத்தில் இருந்தும் முழுமையாய் விடுதலை பெற்று-எழுத்துத் தவததை மட்டும் மேற்கொள்ளும் சூழல் கனியுமென நம்புகிறேன்.

மனநிறைவோடும் உற்சாகமாகவும் நான் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமை சித்தாந்ததை எஞ்சிய என்காலம் முழுவதும் என்னால் இயன்றவரைத் தூக்கிச் சுமப்பேன்.ஓய்வெனப்படுவது அதுதானே...

தோழன்

சு.பொ.அகத்தியலிங்கம்.

10 comments :

  1. kumaresan

    உங்களுக்கு ஏதய்யா ஓய்வு... ஏதோ ஒரு பணியில் ஈடுபட்டிருக்கவே போகிறீர்கள் என்பது நிச்சயம். அது மக்கள் நலன்களும் உரிமைகளும் விடுதலையும் சார்ந்த பணியாகவே இருக்கும் என்பதும் நிச்சயம்.

  1. ganesh

    வேலை மாற்றம் என்பதைத்தான் உங்கள் மடல் காட்டுகிறது. அன்றாடம் எழுதிக் குவிக்கும் பணியிலிருந்து, நிதானமாக யோசித்து கனமான விசயங்களைக் குவிக்க வாழ்த்துக்கள்...

  1. K.CHINNIAH

    அவசரகால அடக்குமுறைகள் நம்மை இணைத்தது! கட்சி நமக்கு என ஒரு புதிய பொறுப்பை கொடுத்தது! அது இன்றைக்கு வாலிபர்களின் அமைப்பாக உயர்ந்து நிற்கிறது! அந்த நினைப்பு ஏதோ ஒருவிதத்தில் நம்மை பெருமைகொள்ளவே செய்கிறது!(இது ஒரு சோற்று பதம் மட்டுமே) நாம் ஏற்றுக்கொண்ட தத்துவம்- அதன் நடைமுறை, அந்த அமைப்பின்மீது ஒரு எறும்பு கடித்தால் கூட, நம்மை அறியாமலேயே - அநிச்சை செயலாக நமது கைகள் அந்த எறும்பை அடிக்க எதையோ தேடுகிறது! அது நம்முடைய தனிப்பட்ட பெருமையோ-சாதனையோ அல்ல, அவை நமது முன்னோடிகளின் பெருமையும்-சாதனையும் மட்டுமே. நாம் அவர்களோடு பழகினோம் என்பதைவிட- அவர்களோடு சேர்ந்தே வாழ்ந்தோம்! இன்னும் வாழ்த்து கொண்டும் இருக்கிறோம்!
    இங்கு ஒய்வு என்பதற்கு இரு பொருகள் மட்டுமே உண்டு! ஓன்று நோய், மற்றொன்று மரணம்! இதுவே இயக்கவியல் விதி! கட்சி உனக்கு ஒய்வு கொடுக்கவில்லை! உனக்கான பணிகளை அதிகப்படுத்தி இருக்கிறது!
    எனது தோழனின் முடிவில் நெருடல் இருப்பினும், உனது பயனுள்ள பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!
    மரணம் மட்டுமே நம்மை ஓய்வெடுக்க செய்யட்டும், மறைந்த நமது தலைவர், தோழர் A . பாலசுப்ரமணியம் உன்னைப்பற்றி என்னிடம் கூறியதை மறுநாளே உனக்கு சொன்னேன், அந்த நினைவு தொடரட்டும்! வாழ்த்துக்களுடன் அன்புத்தோழன், கா.சின்னையா.

  1. vimalavidya

    YOU cannot take rest or leave from the task which you voluntarily taken..Under your leadership DYFI formed and grown..It is a history...nobody can change or remove..As com.Nanmaran said during DYFI ALL INDIA CONFERENCE HELD AT Madras Vijaya sesha Mahal last day, you are going to another class room..with the same syllabus..But I understand and respect your feelings and worries...you will over come.I believe..you can write more..think new/ improved, broad, manner...work for the LEFT UNITY AND STRUGGLE...

  1. venu's pathivukal

    ஓர் அழகான காதல் கவிதை ஒன்றுண்டு..

    என்னை நீயே புரிந்து கொள்ளவில்லை என்றால்
    வேறு யார் புரிந்து கொள்ளக் கூடும்?
    என்னை நீயே புரிந்து கொள்ளவில்லை என்றால்
    வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?

    இது காதலுக்கு மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்..அமைப்புக்குள்ளும் இதற்குப் பொருள் வரும்..

    தனிப்பட்ட முறையில் இப்படியாக விலக விருப்பம் தெரிவிக்க வேண்டாம் என்று என்னால் இயன்றவரை உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்..
    உங்கள் விருப்பப்படி விடுபட்டு வெளியே வந்த தருணத்தில் நானும் அங்கிருந்தேன்..

    27 ஆண்டுகள், 11 மாநாடுகள் மாநிலக் குழு உறுப்பினராகப் பணியாற்றத் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்துச் செய்லாற்றியதையும், தற்போது சொந்தக் காரணங்களால் ஓய்வு கேட்டு வந்ததாகவும் தெரிவித்தீர்கள்..

    இம்மைப் பிறப்பில் பிரியலாம் என்றேனாக்
    கண்ணீரை நீர் கொண்டனள்
    என்று அடுத்த பிறவியிலும் தொடரும் காதலைக் குறித்தான் குறளாசிரியன்..

    எஞ்சிய காலம் முழுக்க உற்சாகத்தோடு ஏற்றுக் கொண்ட தத்துவத்தை நெஞ்சில் ஏந்தி இயங்குவேன் என்ற உங்கள் மொழியிலும் அந்தக் காதல் ததும்புகிறது..

    அது மானிடத்தை நேசிக்கும் காதல் உணர்வு..
    இயற்கையோடு ஒன்றிய உணர்வும் அது..

    மேலும் மேலும் வலுப்பட்ட தோழமையோடு பெருகும் புதிய நட்புறவுகளோடு
    தொடரட்டும் உங்கள் பணி..

    பத்திரிகைப் பணியையும் துறப்பது குறித்து மறு சிந்தனை செய்யுங்கள்..

    எஸ் வி வேணுகோபாலன்

  1. kumaraguruparan

    கனத்த இதயத்தோடு முக்கியப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் தங்கள் மனநிலையை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள முடிகின்றது...முழுநேர ஊழியரின் பலங்கள் , பலவீனங்கள் பற்றி ஊகிக்க முடிகிறது.--இதர இடங்களுக்குச் சென்று உரையாடும்போதுதான் இயக்கத்தின் பெருமை பிடிபடுகிறது; நல்ல ஊதியத்துடனும், ஏகப்பட்ட படிப்புகள் படித்திருப்பினும், பெறும் பதவிகள் வகித்திருப்பினும் அறியாமை இருளில்தான் வெளியில் உள்ளோர் 'அமர்ந்திருக்கின்றனர்' இதுவே இடதுசாரி இயக்கத்தின் பலம்! பொருளாதார நிலைமை வாழ்வாதாரத்தை முடக்கும் நிலை; இது முழுநேர ஊழியரின் சூழல் பலவீனம். இடதுசாரி இயக்கத்தின் ஒரு பகுதியாகவே தாங்கள் நடைபோட வாழ்த்துக்கள்.

  1. Unknown

    இந்த பதிவு கொஞ்சம் சலனபடுத்துகிறது ஆனாலும் பரவாஇல்லை இது உங்களின் முடிவு...மார்க்சிஸ்டுகளுக்கு ஓய்வென்பது ஒருபோதும் இல்லை.பணி இடம் மாறலாம் ஆனாலும் பணிகள் தொடரும்.உங்களின் ஆழமான ஆய்வில் இன்னும் பல படைப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் சக மார்க்சிய மாணவர்களில் நானும் ஒருவன்.....எழுத்து பணி தொடரட்டும்....

  1. சமன் மாறாது

    எழுதுங்கள் தோழரே, எழுதிக்கொண்டே இருங்கள். நீங்களே சொல்லியிருக்கிறபடி காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். எழுத்துக்களின் வழியாக உங்கள் உறவு எப்போதும் தொடரும் என்று நம்புகிறேன்.

  1. மாதவராஜ்

    வெறுமை உணர்தல் என்பது ஒரு வகை சோர்வு மட்டுமல்ல, நமக்குள் ஒலித்துக்கொண்டு இருக்கும் தோல்விகள்.நமது பணியை சந்தோஷமாகவும், முழு ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும். அதுவே நாம் அந்தப் பணிக்குச் செய்கிற மரியாதை. நமக்கும் நிறைவைத் தரும். அப்படியான வெளிகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதனைக் கண்டு, தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் முக்கியமே. கொண்ட சித்தாந்தமும், இயக்கமும் இதன் மூலம் மேலும் உயிர்ப்போடு இருக்கும்.

    எழுதுங்கள்.... இயங்குங்கள் தோழரே!

  1. Thoduvanam

    வாலிபர்களுக்கு வழி விடவேண்டும் என்ற தங்கள் கருத்து மிக மேன்மையானது.வரும் தலைமுறை தழைக்க பின் புலத்தில் செயலாற்றலாம்.மூப்பு நம், உபயோகத் தன்மையை பற்றிய ஓராயிரம் வினாக்கள் எழுப்பும் தங்கள் அனுபவத்தில் தேர்ந்து தெளீவீர்கள். உங்கள் தொண்டை தொடர வாழ்த்துக்கள்.

Post a Comment