இது பொய்களின் காலம்
பொய்களின் கூட்டம் மிகப்பெரியது
விதவிதமான பொய்கள்
புராணப் பொய் சாஸ்திரப் பொய்
கவிதைப் பொய் கதைப் பொய்
சினிமாப் பொய் சரித்திரப் பொய்
பொருளாதாரப் பொய் புள்ளிவிபரப் பொய்
சட்டமன்றப் பொய் நாடாளுமன்றப் பொய்
சட்டப்பொய் நீதிமன்றப் பொய் வியாபாரப் பொய்
காதல்ப் பொய் குடும்பப் பொய்
பள்ளிக்கூடப் பொய் கல்லூரிப் பொய்
ஊடகப் பொய் மருத்துவப் பொய்
கால்ப்பொய் அரைப்பொய் முக்கால்ப் பொய்
முழுப்பொய் அண்டப் பொய் ஆகாசப் பொய்
இது பொய்களின் காலம்
பொய்களின் கூட்டம் மிகப்பெரியது
பொய்களின் கூட்ட நெரிசலில் மிதிபட்டு நசுங்கி
குத்துயிரும் குலையுயிருமாய் உண்மை…
அதன் ‘அபயக் குரல்’ கூட வெளியே கேட்காத அளவு
பொய்களின் பெருங்கூச்சல் ! வாழ்க ஜனநாயகம் !
சுபொஅ.

0 comments :
Post a Comment