நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?
நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?
ஓங்கி உயர்ந்த கட்டிடங்களையா ?
விளம்பரத்தில் மினுக்கும் வர்த்தக நிலையங்களையா ?
கார்ப்பரேட் கொளையை பொதிந்த பெரும் நிறுவனங்களையா ?
பளபளப்பான கல்வி ஏலக் கடைகளையா ?
மரண வியாபாரத்தில் கல்லா கட்டும் மருத்துவ மனைகளையா ?
பகட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் மெகா திருமண மஹால்களா ?
பாலம் ,சாலை ,ரயில் ,பஸ் ,கார் ,ஆட்டோ ,டூ வீலர் நெரிசல் நெரிசல் இதுதான் அடையாளமா ?
நின்று பேச நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களா ?
நுனி நாக்கு ஆங்கிலமும் நவநாகரீக உடையும் காதோடும் கண்ணோடும் ஒட்டிக்கொண்ட அலைபேசியுமாய் திரியும் இளைஞர்கள் இளைஞிகளையா ?
நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?
நவீனத்தோடு கைகுலுக்கினும் சாதி ,மத ,பாலின வன்மத்தை சுமந்து திரியும் மானுடம் கொன்ற மனித உருவங்களையா ?
அம்பேதர் சாதி ,மத ஒடுக்குமுறையின் கொடூர உறைவிடமாய் ; ஆதிக்கம் , ஏற்ற தாழ்வு மிக்க கிராமங்களைக் கண்டு கொதித்தார்
கிராமங்களின் நகலாய் திரியும் மனித மந்தை உலவும் சந்தையை நகரம் என்று எப்படி அழைப்பது ?
சுபொஅ.

0 comments :
Post a Comment