எல்லா சாலைகளையும்....

Posted by அகத்தீ Labels:

 


எங்கு நோக்கினும்

எல்லா நேரமும்

 எல்லா சாலைகளையும்

உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள் .

ஏதோ ஒரு காரணம்

சொல்வதற்கு இருக்கிறது .

 

குழந்தைகளும்

முதியவர்களும்

வாகனம் ஓட்டிகளும்

அர்ச்சனை செய்யாத நாளில்லை .

தூசும் தும்பும் எல்லோரையும்

தும்மவிட்டு வேடிக்கை பார்க்கிறது !

 

சாலை போடும் முன்பே

எல்லா குழாய்களையும் தண்டுவடங்களையும்

புதைக்க ஒரு வழிவகை செய்யக்கூட

உங்கள் திட்டமிடலில் இடமில்லையா ?

 

கோளாறு மூளையிலா ?

பண ஆசையிலா ?

 

சுபொஅ.

01/03/25.


0 comments :

Post a Comment