பாவங்கள் செய்வது பாவமல்ல

Posted by அகத்தீ Labels:

 


பாவங்கள் செய்வது பாவமல்ல

பரிகாரம் செய்யாமலிருப்பதுதான் பாவம் !

 

ஞாயிறு தோறும்

பாவமன்னிப்பு கேட்கலாம் …

 

 எப்போதாவது ஒரு முறை

மகா கும்பத்தில் முங்கி எழுந்தால்

மூன்று ஜென்ம பாவமும்

முற்றாகத் தொலையும்

 

மண்டியிட்டு தொழுது மன்றாடினால்

பாவம் கரைந்தே போகும்

 

பாவங்கள் செய்வது பாவமல்ல

பரிகாரம் செய்யாமலிருப்பதுதான் பாவம்!

 

புரியவில்லையா ?

 

பாஷ்யம் சொல்கிறேன் ..

 

அட ! விளக்கம் சொல்கிறேன் அப்பு !

 

 

ஊழல் செய்வது பாவமல்ல

ஊழல் செய்தோர் பாஜகவில் சங்கமிக்காதிருப்பதே பாவம் !

 

மதக் கலவரம் செய்வது பாவமல்ல

மதக்கலவரம் செய்வோர்

‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லாதிருப்பதே பாவம் !

 

தேசத்தை சூறையாடுவது பாவமல்ல

சங்கி சாக்கடையில் பன்றியாய்

கிடந்து மகிழாமல் இருப்பதே பாவம் !

 

முட்டாளாய் இருப்பது பாவமல்ல

சனாதனத்தை மூச்சுக்கு முன்னூறு முறை

வியந்தோதாது இருப்பதே பாவம் !

 

பாவங்கள் செய்வது பாவமல்ல

பரிகாரம் செய்யாமலிருப்பதுதான் பாவம் !

 

சுபொஅ.

23/02/25.

 

 

 

 


0 comments :

Post a Comment