வீட்டில்
இருக்கும்
ஒவ்வொரு பாத்திரத்துக்கு பின்னாலும்
ஒரு வரலாற்றுக் குறிப்பை
சொல்லிக்கொண்டே இருக்கிறாள் மனைவி !
அதில் பல உறவுகளையும் பல
நிகழ்வுகளையும்
அசைபோட்டுக்கொண்டே இருக்கிறாள்.
“நீங்கள் வாங்கிக் கொடுத்த
முதல் பட்டுப்புடவை இது ….
43 வருடங்கள் ஓடியதே தெரியவில்லை”
வரலாற்றுக் குறிப்பைக் கேட்டு
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால்
“ நீங்கள் வாங்கிக் கொடுத்த
ஒரே பட்டுப் புடவை இதுதான்..”
என்கிற அடிக்குறிப்போடு
எனக்கொரு குட்டும் வைத்துவிட்டாள்.
நானொரு மக்கு
இதுபோல் எதுவும்
என் நினைவில் இல்லை
வரலாற்றில்
நான் புலி என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்..
எல்லாம் வெளியில்தான்....
சுபொஅ.
02/11/24.
0 comments :
Post a Comment