மொழியாக்கம்

Posted by அகத்தீ Labels:

 

என்னுடைய கவிதை ஒன்று கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . தோழர் மீனாட்சி சுந்தரம் [ மாநிலச் செயலாளர் கர்நாடக சிஐடியு , மாநிலச் செயற்குழு ,சிபிஎம்] கன்னடத்தில் மொழியாக்கம் செய்து தன் முகநூல் பக்கத்தில் படத்துடன் பதிந்துள்ளார் .அவர் மொழியாக்கம் செய்த கன்னடக் கவிதை இதோ , அதே படத்துடன் …

 

 

*ಜವಾಬ್ಧಾರಿ ನಿರಾಕರಣೆ:*

(Disclaimer)

ನೀವೇ ನನ್ನನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದಿರಿ!

ನೀವೇ ಕಥೆಗಳನ್ನು ಹೆಣೆದಿರಿ!

ನೀವೇ ಹಲವಾಗಿ ಭಾಗಿಸಿಟ್ಟಿರಿ!

ನೀವೇ ನನ್ನ ಆರಾಧಿಸಿದಿರಿ!

ನೀವೇ ಘರ್ಷಣೆಗಿಳಿಸಿದಿರಿ!

ನೀವೇ ಮೋಸಕ್ಕೊಳಗಾದಿರಿ!

ನೀವೇ ಮೋಸ ಮಾಡಿದಿರಿ!

ನಿನ್ನೆ, ಇಂದು ಮತ್ತು ನಾಳೆಯು

ಕೆಡಕೋ ಒಳಿತೋ ಯಾವುದು ನನ್ನ ಕೃಪೆಯಲ್ಲ

ಅವು ನಿಮ್ಮ ಕ್ರಿಯೆ ಯಾವಾಗಲೂ ನಿಮ್ಮದೆ

ಯಾವುದೊಂದಕ್ಕೂ ನನ್ನನ್ನು ದೋಷಾರೋಪಿಸಬೇಡಿ

ಯಾವುದೂ ನನ್ನ ಕಾರ್ಯವಲ್ಲ ಮತ್ತು ನನ್ನ ಕೈಯಲ್ಲೂ ಇಲ್ಲ

ಹೊಸ ವರ್ಷದ ಶುಭಾಶಯ ಕೋರಿ

ನಾನು ನನ್ನ ಜವಾಬ್ಧಾರಿಯನ್ನು ತ್ಯಜಿಸುತ್ತೇನೆ.

ಇಂತಿ,

#ನಿಮ್ಮದೇವರು

[ಎಲ್ಲಾ ಧರ್ಮಗಳು, ಉಪ ವಿಭಾಗಗಳು...]

 

தமிழில் நான் எழுதிய கவிதை

 

பொறுப்பு துறப்பு :

 

நீங்களே என்னைப் படைத்தீர்கள் !

நீங்களே கதை புனைந்தீர்கள்!

நீங்களே கூறுபோட்டீர்கள்!

நீங்களே கொண்டாடினீர்கள் !

நீங்களே மோதவிட்டீர்கள் !

நீங்களே ஏமாந்தீர்கள் !

நீங்களே ஏமாற்றினீர்கள்!

நேற்றும் இன்றும் நாளையும்

தீதும் நன்றும் என் செயல் அல்ல

உம் செயலே ! என்றும் உம் செயலே !

யாதொன்றுக்கும் என்னை நோகவேண்டாம்

எதுவும் என் செயல் அல்ல என் கையில் இல்லை

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி

என் பொறுப்பு துறக்கிறேன்

இவண் ,உங்கள்

கடவுள்

[ எல்லா மதம் பிரிவு உபபிரிவு ...]

 

 

நன்றி ! நன்றி ! தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நன்றி !

 

 

 

0 comments :

Post a Comment