கவிதை பிறக்காது -ஆயின்,

Posted by அகத்தீ Labels:

 

ரசனை இல்லாமல்

கவிதை பூக்காது

அன்பில் நனையாமல்

கவிதை முளைக்காது

காதலில் தோயாமல்

கவிதை துளிர்க்காது

கோபம் தகிக்காமல்

கவிதை வெடிக்காது

அனுபவம் செதுக்காமல்

கவிதை பிறக்காது -ஆயின்,

மனிதம் கொன்றபின்

கவிதைதான் ஏது ??

 

சுபொஅ.

23/12/2021.

0 comments :

Post a Comment