புரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப்பெருநதி : 43


புரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்


சு.பொ.அகத்தியலிங்கம்




புரட்சிக்குப் பின் லியூஸிக் நினைவாக அவர் போராடிய 
மாஸ்கோவிலுள்ள மாலய ஸெர்ப்புஹோவ்ஸ்கயா வீதிக்கு 
லியூஸினோவ்ஸ்காயா என பெயர் சூட்டப்பட்டது.



‘...இப்போது லீலீ பிரவுன் எழுதிய ‘மாதர் பிரச்சனை’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் ஆழமானதுதான் என்றாலும் எனக்குஅவ்வளவாகப் பிடிக்கவில்லை. சில இடங்களில் நன்றாகவும் இருக்கிறது. கொலந்ந்தாய் எழுதிய ‘மாதர் பிரச்சனையின் சமுதாயஅடிப்படைகள்’ எனும் புத்தகம் கிடைத்தால் அனியூஸியா தயவுசெய்து படித்துப் பார். அது எனக்கு உள நிறைவைத் தந்தது…’தங்கைக்கு அக்கா லியூஸிக் லிஸினவா எழுதிய கடித்திலுள்ள வரிகள் .எழுதிய அக்காவுக்கே வயது 19 தான்; எழுதியதோ புரட்சியின் உச்சகட்ட கொந்தளிப்பும் போராட்டமும் மிகுந்த மாஸ்கோவிலிருந்து. எழுதப்பட்ட நாள் 1917 ஆகஸ்ட் 30.



45 நாட்களுக்குப் பிறகு இன்னொரு கடிதம்
‘…நேற்று லியூஸிக்கை செஞ்சதுக்கத் தில் அடக்கம் செய்தோம்…’ இக்கடிதத்தை இளைஞர் கழகம் அனுப்பி இருந்தது. லியூஸிக்குக்கு வழங்கப்பட்ட செங்கொடி மரியாதை குறித்தும் அக்கடிதம் பேசியது.ஆயுத மோதல் நடந்த மாதங்களில் செம்படைக்கு ஆதரவாக செய்தி அனுப்பும் பணி, மருத்துவ உதவிப்பணி, தடையரண் அமைக்கும் பணி அனைத்திலும் உத்வேக முடன் ஈடுபட்ட லியூஸிக்கை குறிவைத்து எதிரிகள் நவம்பர் 14இல் சுட்டு வீழ்த்தினர்.லியூஸிக் தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் தெறித்த நம்பிக்கைமிகு கவிதை வரிகள்


‘விரைவில் வெயிலடிக்கும்.
மொக்குகள் மலரும். பனிக்காலத்தின்
கடைசிச் சுவடுகளை வாழ்க்கைத்
துடைப்பம் போல் துடைத்து ஒழித்துவிடும்’


இப்போது வாசித்தாலும் நெஞ்சம் விம்மும்;புரட்சிக்குப் பின் லியூஸிக் நினைவாக அவர் போராடிய மாஸ்கோவிலுள்ள மாலயஸெர்ப்புஹோவ்ஸ்கயா வீதிக்கு லியூஸி னோவ்ஸ்காயா என பெயர் சூட்டப்பட்டது.1905இல் துவங்கிய “பெண்களுக்கு சம உரிமைகள் சங்கம்” ‘ரத்த ஞாயிறு’ தினத்திற்கு பின்னர் ஆண்-பெண் சம உரிமை,பெண்களுக்கு வாக்குரிமை இவற்றுக்காகப் போராடியது.


1908இல் ‘அனைத்து ரஷ்ய மகளிர் காங்கிரசின் ‘முதல் மாநாடு பெண்களின் சட்ட உரிமைகளை முன்னிறுத்தியது.  புரட்சியாளரான அலக்ஸாண்ட்ரா கொலந்தாய் 1872இல் புனித பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர். 1898ல் ஏமாற்றம் தந்த குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறியபின் அரசியல் பொருளாதாரம் கற்பதற்காக சூரிச்செல்கின்றார். நெசவாலை ஒன்றின் தொழி லாளர் குடியிருப்பொன்றில் இறந்து கிடந்த சிறுவனொருவனைக் காண்கிறார். இந்த நிகழ்வு அவரை ஒரு புரட்சியாளராக மாற்றியதெனலாம். 1913களிலிருந்து சமூக ஜனநாயகக் கட்சியில் மென்ஷ்விக்குகளோடு செயல் படத் தொடங்குகிறார்.


1914இல் இறுதியில் போல்ஷ்விக் கட்சியில் இணைந்தார். குழந்தைகள் கல்வி குறித்த அவரது முதல்கட்டுரையே பெரும் வரவேற்பைப்பெற்றது. பெண்கள் சமத்துவம் குறித்து இவரதுஎழுத்துகளும் செயல்பாடும் காத்திர மானவை. இவ்வெழுத்தில் போராளி லியூஸிக்தன் நெஞ்சைப் பறிகொடுத்ததை ஆரம்பத்தில்பார்த்தோம். கிளாரா ஜெட்கின் போல் கொலந்தாய்க்கும் பெண் சமத்துவப் போரில் முக்கிய பங்குண்டு. லெனினது மத்திய கமிட்டியின் ஒரேயொரு பெண் உறுப்பினர் இவர் மட்டுமே. சர்வதேச பெண்கள் இயக்கத்தின் செயலாளராகவும் புரட்சிக்குப் பின்னர் அரசின்சமூக காப்புறுதியில் மக்கள் ஆணையாள ராகவும், சோவியத் குடியரசின் ஸ்காண்டி நேவியன் நாடுகளுக்கான தூதுவராகவும், ராஜதந்திரியாகவும் பணியாற்றினார். புரட்சியில், ஆண்களோடு, பெண்களும் போராடி உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அப்பெண்களை பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய் தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்;“புரட்சியில் பங்கு பெற்ற பெயர் தெரியாத கதாநாயகிகள் கிராமங்களில் இருந்துவந்த ஏழைகள்.


போரினால் சூறையாடப்பட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள். கிழிந்த பாவாடை, தலையில் சிவப்புநிற ஸ்கார்ப், குளிரிலிருந்து தப்பிக்க ஒட்டு போட்ட கோட் அணிந்தவர், இளம் பெண்கள், மூதாட்டிகள், ராணுவ வீரர்களின் மனைவிகள், கூலித் தொழிலாளிகள், வீட்டோடு இருக்கும் பெண்கள், படித்த பெண்கள், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பெண் டாக்டர்கள்...எல்லா வேறுபாடுகளையும் தாண்டி பெண்கள் பங்கேற்றனர். 



...சுயநலமின்றி, மகிழ்ச்சியுடன், ஒரே நோக்கத்துடன் பங்கேற்றனர். ராணுவ வீரர்களின் குல்லாயை அணிந்து, செஞ்சேனையுடன் இனணந்து போராடினர். ராணுவத்தில் மக்கள் தொடர்பாளர் களாக பணியாற்றினர்.
கிராமங்களில், பெண்கள் பல நூற்றாண்டுகளாக அக்கிரமம்செய்த  நிலப்பிரபுக்களை ஓட ஓட விரட்டி யடித்தனர்.’பல்லாயிரம் பெண்கள் புரட்சியில் பங்குபெற்ற போதிலும், வழி நடத்தி, வெற்றிக்கு உறுதுணையாக நின்ற சில பெண்கள் பற்றி சுருக்கமாக கொலந்தாய்   தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அவர் முதலில் குறிப் பிடுவது, லெனினின் துணைவியான நதேழ்தா கான்ஸ்டாண்டிநோவா குரூப்ஸ்காயா.எப்பொழுதும். மெளனமாக மற்றவர் பேசுவதை குரூப்ஸ்காயா கவனிப்பார். பின்னர்லெனினிடம் அனைத்தையும் பரிமாறிக் கொள்வார்; தனது கருத்துக்களை தெரி விப்பார். அவர் லெனினின் வலது கரம் என்றால் மிகையாகாது. தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. கட்சி கூட்டங்களில் எப்பொழுதாவது தான் பேசுவார். பெண்களி டையே நம்பிக்கையை, போராடும் உணர்வைஏற்படுத்துவதில் வெற்றி கண்டபெண்மணி குரூப்ஸ்காயா.



அன்று கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்து செயல்பட்ட எலீனோ டிமிடியேவா ஸ்டஸ்ஸோவா. சரியான பெண்களை கண்டுபிடித்து, சரியான பணியைஒப்படைக்கும் திறன் படைத்தவர். ஜார்மன்னர் ஆட்சியில் சிறையில் அடைக்கப் பட்டு, நாடு கடத்தப்பட்டவர். கடுமையான துன்பங்களை எதிர் கொண்டதன் விளைவாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டார். மனவுறுதி கொண்டவர்.க்ளவ்டியா நிகொலோயேவா   1908இல் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்தார்.சிறைவாசம், நாடு கடத்தல் என அனைத்துவித கொடுமைகளையும் வீரத்துடன் எதிர்கொண்டார். 1917இல் லெனின் கிராடுக்கு திரும்பிய அவர், உழைக்கும்பெண்களுக்கான முதல் பத்திரிகை யான  “கம்யூனிஸ்ட்கா” வை  துவக்கி னார். கொன்கொர்டியா, சமொயலோவா ஆகிய இருவருடனும் சேர்ந்து உழைக்கும் பெண்கள் இயக்கத்தை கட்டினார்.
சமொயலோவா சிறந்த பேச்சாளர். புரட்சியின் தயாரிப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இனேஸா அர்மாந்த்ரஷ்ய; தடைகளைத் தாண்டி போரிட்ட   வர்வரா நிகொலயேவா;    கொசாக்குகளால் சுட்டுக்கொல்லப்பட்ட வேராஸ்ல ட்ஸ்காயா; போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இறக்க  நேரிட்டயெவ்ஜினியா போஷ்; லெனினின் இரு சகோதரிகள் அன்னா இலினிடினா, மரியா உலியநோவா, ரயில்வே ஊழியர் வரியா, பஞ்சாலை ஊழியர் ப்ய்டோநோவா... என அடுக்கிக் கொண்டே போகலாம். ஸரீஸா ரெய்னெர் 31 வயதிலேயே மரணமடைந்தார். 21 வயதில் புரட்சியில் தன்னை நேரடியாக இணைத்துக் கொண்டார்.



வோல்கா பிரதேசத்தில் உள்நாட்டுப் போரில் பங்கேற்றார். கடைசி எட்டாண்டுகள் நாவல்கள் எழுதுவதில் கரைந்தார் . ‘மார்க்ஸையும் லெனினையும் தங்கள் ஒவ்வோர் உயிரணுவிலும் நிறைத்துக் கொண்டிருப்பவர்கள்’ என இளைஞர்கள் குறித்து நம்பிக்கைப் பிரகடனம் செய்தார்.வீரத்துடன் போராடிய முகம் தெரியாத, பெயர் பதிவு செய்யப்படாத பல்லாயிரக் கணக்கான பெண்கள் ரஷ்ய புரட்சியின் ரத்தமும் சதையுமாவர்.


புரட்சி தொடரும்...

நன்றி : தீக்கதிர் , 28/08/2017

0 comments :

Post a Comment