தலைப்பை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்
சு.பொ.அகத்தியலிங்கம் .
இரவின் நிசப்தம் கொடூரமாய்
உறுத்தியது
நம்பிக்கைக்கும் விரக்திக்கும்
இடையில்
ஒவ்வொரு நொடித்துளியும்
நகர்ந்தது
தூங்கிக் கொண்டிந்தேன் ஆனால்
தூங்கவில்லை
விழித்துக் கொண்டிருந்தேன்
ஆனால் விழித்திருக்கவில்லை
என் இதயத்துடிப்பை நான்
கேட்கிறேன்
அது ஏன் சீறிப் பாய்ந்து
ஆர்ப்பரிக்கிறது ?
மூளைக்குள் யாரோ குண்டு
வைத்துவிட்டார்கள்
ஒருவேளை அந்நிய நாட்டுச்
சதியாக இருக்குமோ ?
நேற்று படித்த செய்திகள்
ஒவ்வொன்றாய்
காற்றில் புரண்டு புரண்டு
அச்சுறுத்துகிறது
மாண்புமிகு இதயங்கள் மரத்துப்போன
தேசத்தில் – இனி
மனச்சாட்சிக்கும் காவி வர்ணம்
பூசாவிடில் தேசவிரோதி என்பார்களோ ?
மநுவைக் கொண்டாடி மநுவுக்கு
அடிபணிந்து இழிவைச் சுமந்து
செயலற்று இருப்பதைவிட செத்துப்போவது
மேலல்லவா ?
அந்த மரணத்துக்கும் வலிமை
இருக்கும் !!!!
23.01.2016
0 comments :
Post a Comment