நூல் சிறியது. உள்ளடக்கம்
ஆத்மாவும்
அது படும்பாடும்,ஆசிரியர் : சாகித் ,வெளியீடு : பறையோசை பதிப்பகம் ,1/171 ,
கடைத் தெரு ,பி.அழகாபுரி, கீழச்செவல்பட்டி - 630 205.பக் : 36 , விலை :
ரூ.20.
“
மதவாதிகள் அனைவரும் ஒரே சுருதியில் பேசுகிறார்கள் . அதற்குத் தேவையான
பொய்கள்தான் இந்த ஆத்மா, சொர்க்கம் , நரகம், தலைவிதி என்ற கடவுள் கோட்பாடு
கள் .” என்கிறார் நூலாசிரியர். இந்நூலின் சாரம் அதுதான் . ஆத்மா என்ற
கற்பிதத்தை வழக்கமாக இந்துமத புனைவுகளை தோலுரிப்பதன் மூலமே
அம்பலப்படுத்துவர். இந்நூலில் அத்தோடு குரான் வழியாகவும் ஆத்மா என்கிற
பொய்மை கட்டுடைக்கப் பட்டுள்ளது மிகமுக்கியமானது . முதலாவதாக பெரியார்
வழியில் மதக்கருத்துகளின் முரண்பாட்டை மையமாக வைத்து ஆத்மா, சொர்க்கம்,
நரகம் போன்றவை எவ்வளவு அபத்தமானது என இந்நூல் வாதாடுகிறது ; மறுபுறம் நடை
முறை அனுபவம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் வாதிடுகிறது. உடலின் எந்த
உறுப்பினுள் தேடிப்பார்ப்பினும்; சோதித்து சலித்து நுணுகிப் பார்த்தாலும்
ஆத்மா அகப்படாது .
ஏனெனில் அது இல்லாத ஒன்று . நூலாசிரியர்
கூர்மையாக ஆய்ந்து தக்க வாதங்கள் மூலம் இதனை
நிறுவுகிறார்.மதநம்பிக்கையாளர்
கள் மனம் புண்படுமே என சிலர் வாதிடக்கூடும்.
என்ன செய்வது... உண்மை உறுத்தத்தானே செய்யும். அறிவியல் கண்டுபிடிப்புகள்
ஒவ்வொன்றும் மதக்கற்பனையை பகடி செய்த படிதானே பிறக்கின்றன.
அதற்காக
அறிவியல் வேண்டாமென்று சொல்லமுடியுமா?இஸ் லாமை யாரும் விமர்சிப்பதில்லை
என்கிற இந்துத்துவ ராமகோபாலன்கள் கூற்றுக்கு இந்நூல் ஒருபதிலடி .ஆசிரியர்
இஸ்லாம் மதத்தில் பிறந்து விட்டதாலும் ; அதனை உள்வாங் கியவர் என்கிற
முறையிலும் - எதிர்ப்புவரும் என்ற நிலையிலும் துணிந்து எழுதியுள்ளது
பாராட்டுக்குரியது . இதனை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் ; இது அவர வர்
உரிமை ; ஆயினும் படிப்பது அவசியம் படித்து விட்டு முடிவுக்கு வாருங்கள்.
0 comments :
Post a Comment