படிப்பினை

Posted by அகத்தீ Labels:

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
ஏழை சொல் அம்பலம் ஏறாது
அனுபவச் செறிவில் தெறித்த வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் நினைவில் சுழல,,
இடிந்து கிடன்தான் குப்பன் அங்கு

வள்ளுவன் வந்தான் வாய் திறந்து சொன்னான்
தெய்வத்தான் ஆகாது எனினும் அங்கு
மெய்வருத்த கூலி தரும்

வள்ளுவன் சொன்னது கூட
குப்பனுக்கு போய்ச்சேராமல்
மநுவின் அதர்மம்
கட்டளை இட்டே தடுத்தது

காலங்கள் ஓடின காட்சிகள் மாறின
வள்ளுவனும் மார்க்சும்
குடிசைக்கு வந்ததனர்

ஆனாலும் இன்னும்
மண்டையில் ஊறிய
பழைய கசடுகள்
பாதையை தடுக்கிறது

புதிய சிந்தனை ஊற்று
இரத்தத்தோடு இரண்டற கலக்க
இன்னும் எத்தனை காலம்?

மாறும் எல்லாம் மாறும்
வாழ்க்கையும் காலமும்
சகலத்தையும் மாற்றும் ..

தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பழைய பொய்
பட்டுக்கோட்டை சொன்னதே மெய்

புதிது புதிதாய் சிந்திக்க பழக்கு
போரட்டம் என்பதை வாழ்க்கைக்கு

0 comments :

Post a Comment