மாநாடு என்பது கூடிக்கலையவோ
மாலைநேர தேநீர் விருந்தோவானவில்லாய் தோன்றி மறைவதோ
வந்துபோகும் பண்டிகை நாளோ
போற்றிப்பாடிடும் பஜனைக்கூடமோ
பின்னென நினைதாய் பேதை நெஞ்சே!
பேசாப்பொருளைப் பேசும் இடமோ
ஞானம் சுடரும் சொற்போர் நிகழ்வோ
உண்மை தேடும் அறிஞர் கூடலோ
ஞாலம் பெற்றதனைத்தையும் பெறும்வகைத் தேடலோ
காலவளர்ச்சியை எட்டும் கடின முயற்சியோ
உள்ளுறைப் பொருளை உரைப்பாய் பேதை நெஞ்சே!
எதுவெனக் கேட்பின் இதுவெனச் சொல்ல
இலக்கணம் வகுத்தது யாரெனச் சொல்வீர்
நெல்லுக்கும் உமியுண்டு நீருக்கும் நுரையுண்டு
புல்லிதழ் பூவுக்கும் உண்டெனெ உரைத்தது தமிழல்லவோ
ஆஹா..ஆற்புதமென வியத்தலும் இலமே
ச்சீ..சீ ஆகாதென இகழ்தல் அதனினும் இலமே
உணர்வையூட்டும் பல்சுவை நிகழ்வும்
அறிவைக்கிளறும் ஆய்வின்பயனும்
அறுசுவை கலந்து சரிவிகித உணவாய்
ஆக்கிப்படைத்தால் திகட்டுமோ யார்க்கும்
செரிமானப் பிரச்சினை நீட்டுமோ தலையை
குற்றம் எங்கெனச் சொல்லவும்
0 comments :
Post a Comment