இதோ! இந்தப் படத்தைப் பாருங்கள் உற்சாகமாக முழக்க மிடுகிறார்கள். அருகே ஏதோ எரிக்கப்படுகிறது. அது என்ன?
அத்தனையும் புத்தகங்கள்.... சிந்தனையை கிளர்த்தும் நூல்கள் ஐன் டின், தாம மூன், ஹெச் ஜி வால், ப்ரூடு உட்பட ஏராளமான சிந்தனை யாளர்கள் அறிவாளிகளின் நூல்கள் தீயில் பொசுக்கப்பட்டன. காரணம் அதை எழுதியவர்கள் அனைவரும் யூதர்கள் என்பதுதான்.
இது நடந்தது 10, மே, 1933 - இடம். பெர்லின். சுற்றிலும் திரண்டு நிற் பவர்கள் அறிவைத்தேடி தேடிச் சேகரிக்க வேண்டிய மாணவர்கள். அவர்கள் மத்தியில் நாஜி பிரச்சார அமைச்சர் ஜோசப் கொயாபல் பேசுகிறார்; யூத அறிவாளித்தனம் இதோ முடிகிறது. ஜெர்மானியப் பாதையில் ஜெர்மானியர்கள் நடைபோடும் புரட்சி துவங்கியவிட்டது. அடுத்த தலைமுறை ஜெர்மானியர்கள் வெறும் புத்தகங்களால் உருவாக்கப்பட்டவர் களாக இருக்க மாட்டார்கள்; மாறாக ஒழுக்கத்தால் உருவாக்கப்பட்டவர் களாக இருப்பார்கள்; இந்த முடிவு அதனைக்கூறும். மரண பயத்தை வென்ற - இரக்கப்படாத உறுதி- மர ணத்தை மகிழ்வோடு பூஜிக்கும் உறுதி - இதுதான் எமது இளையதலைமுறை யின் இலக்கு. இந்த நள்ளிரவில் இந்த தீயில் தீயசக்திகளை (அதாவது புத் தகங்களை) எரித்து சபதம் ஏற்கிறோம். இது உறுதியான வலிமையான குறியீடு. உலகம் இதை அறியட்டும். யூத அறி வாளித்தனம் தொலையட்டும். நமது புரட்சி தொடரட்டும்;
இப்படி வெறிபிடித்து பல்லாயிரம் புத்தகங்களை எரித்த காட்சியை உலகம் மறந்து விடவில்லை. நாஜி சித்திரவதை முகாம்களில் யூத அறி வாளிகள் கொடுமைப்படுத்தப்பட்டு உயிர்பறிக்கப்பட்ட காட்சிகளை வர லாறு மறந்துவிட முடியாது. ஆரிய இனத்தின் மேன்மையை பறைசாற்ற முதலில் புத்தகங்களை தேடித் தீவைப் பதையே பெரும் எழுச்சியாக சித்தரித் தான் கொடுங்கோலன் ஹிட்லர்
அன்று ஒரு நாளில் மட்டும் 25000 புத்தகங்கள் கொளுத்தப்பட்டன. அப்புறம் அன்றாட நிகழ்வானது.
எப்போதும் சர்வாதிகாரிகளும் ஆதிக்க வெறியர்களும் அஞ்சுவது கருத்துகளைத்தான். இந்தியாவில் புத்தமத கருத்துகளை எதிர்கொள்ள முடியாத சனாதன வாதிகள் அவற்றை எரித்தது செய்தி அல்ல. கசப்பான வர லாறு. சமணர்களை உயிரோடு எரித் ததும் வரலாறு. புத்த விஹார்களை - நினைவுத் தூண்களை இடித்துத் தரைமட்டமாக்கியதும். வரலாறு. சனாதன பிராமணிய மதம் தன் தத்துவ வலிமையால் புத்தத்தை சமணத்தை வெல்ல வில்லை. அரசு ஆதிக்கக் கொடுங்கரங்களால் எரித்தும் இடித் தும் அழித்தும் தங்கள் மேலாண் மையை சாதித்தனர். ஆதிசங்கரரும் அப்படித்தான் செய்தார். என்கிறார் விவேகானந்தர்.
இந்தியா ஆகட்டும், சீனமாகட்டும், வேறு எந்த தேசமாகட்டும் கருத்து மோதல்களில் வெல்ல முடியாத ஆளும் வர்க்கம் கருத்துகளைக் கூறும் நூல்களையும் நபர்களையும் ஓழித்துக் கட்ட முயன்றனர். வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு நாட்டிலும் இதற்கு ஆயிரம் உதாரணம் உண்டு.
அரபியர்களின் அறிவுச் செல்வம் அளப்பரியது. நாம் இன்று பயன்படுத் தும் 1, 2, 3 என்ற எண் அரபியர்கள் உல குக்குத் தந்தது. அவற்றைக் கண்டு பொறாமை கொண்ட படை எடுப் பாளர்கள் 1258 ஆம் ஆண்டு மங் கோலிய படை எடுப்பாளர்கள்- அரபிய அறிவு நூல்கள் அனைத்தை யும் ஆற்றில் எறிந்தனர். ஆற்று வெள்ளமே கறுப்புமை வண்ணமாக ஆறுமாதம் ஓடியதாக பதிவு செய்துள் ளனர்.
ஏன் சமீபத்தில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது அங்கி ருந்த உலகப் புகழ்பெற்ற அருங்காட்சி யகத்தை குரங்கு கையில் பூமாலையாக பிய்த்து எறிந்தது. இது 21ஆம் நூற் றாண்டு அமெரிக்க நாகரிகக் கொடை யோ!?
ஹிட்லர் புத்தகங்களை எரிக்கச் சொன்ன அதே 1933ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் கே.எம். செல்லப்பா யாழ்ப்பாணத்தில் தன் வீட்டில் சில நூல்களுடன் ஒரு நூலகம் தொடங்கினார். தமிழர்களின் அறிவுத் தேடல் அந்நூலகம் ஆலவிருட்சமாய் வளர உதவியது.
பழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதிகள், பழைய சுவடிகள் என பல ஆயிரம் நூற்களுடன் சிறிய கட்டிடத் தில்; ஆனால் ஆழமான அறிவுச் சுரங் கமாக யாழ்ப்பாண நூலகம் செயல் பட்டு வந்தது. படிப்படியாக வளர்ந்து வந்தது.
சிங்கள இனவெறிபற்றியெரிந்த போது அவர்களின் கோபப்பார்வை இந்த நூலகம் பக்கம் திரும்ப 1981 மே 31 முதல் ஜூன் 2 வரை நடந்த இனவெறியாட்டத்தில் நூலகம் தீயிட்டு பொசுக்கப்பட்டது. இது தான் இனவெறியின் கோரமுகம். மீண்டும் அந்நூலகம் புதுப்பிக்கப்பட்டாலும் இழந்ததை மீண்டும் பெற முடியுமா?
இங்கே இந்துத்துவ மதவெறி கூட்டம் பாபர் மசூதி இடிப்பு - ஓவி யங்கள் எரிப்பு - என பண்பாட்டு நிறு வனங்களை அறிவுச் சுரங்கங்களை எரிப்பதும்; அறிவு மேல் சாதிக்கு மட்டுமே குத்தகை என பேசுவதும் சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதும் ஹிட்லர் பாசிசத்தின் வழிவந்த செயலே. இன்னும் சொல்லப்போனால் இந்திய பார்ப்பனியத்திடத்திடம் இருந்து தான் பாசிச கருத்தாக்கத்தை தாம் பெற்றதாக ஹிட்லர் கூறுகிறார்.
பாசிடுகள்-சர்வாதிகாரிகள்- ஆதிக்க வெறியர்கள் எப்போதும் கருத்துகளை எதிர்கொள்ள ஆயுத மெடுப்பர். ஆயினும் அது தற்காலிக மானதே. இறுதி வெற்றி அவர்களுக்கு அல்ல. புத்தகங்களே ஆயுதங்கள். புத்த கங்களை படியுங்கள். புத்தகங்களை சேகரியுங்கள். புத்தகங்களை எழுதுங் கள். புத்தகங்களை பரப்புங் கள்...பாசிசம் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும்...இது உறுதி...
Subscribe to:
Post Comments
(
Atom
)
2 comments :
நூல்களைப் படிக்கப் படைக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் என்கிற 'நூலியம்' எப்படியெல்லாம் வடிவெடுத்து வந்திருக்கிறது! எத்தனை நூல்களை எரித்தாலும், இவர்கள் அவற்றை எரித்தார்கள் என்பதுதான் வரலாற்றுணுப்பதிவாகிறது. மக்களுக்கான நூல்களை இப்படிப்பட்ட பழைய/நவீன நூலியவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் புதிய வரலாறு அழுத்தமாக எழுதப்பட வேண்டும். அதற்கு இப்படிப்பட்ட கட்டுரைகள் தளம் அமைக்கும்.
-அ.குமரேசன்
புத்தகங்கள் வெற்று ஜடப் பொருள்கள் அல்ல..ஆதிக்க சக்திகளின் பிடரியைப் பிடித்து உலுக்கிவிடக் கூடியவை என்பதை அற்புதமான வரலாற்றுத் தரவுகளில் இருந்து உணர்சிகர சொற்கோலத்தில் படைத்திருக்கிறீர்கள். .. வாசிப்பை மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பையும் சேர்த்து ஊக்குவிக்கிறது உங்கள் பதிவு...
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே...
அகத்தீ வைத்த தீ பொலிக பொலிகவே...
வாழிய நலமுடன்...
எஸ் வி வேணுகோபாலன்
Post a Comment