வாழ்வின் விதிகளையும்தான்.
கறாரான சூத்திரங்களுக்குள்
அடங்குமோ
வாழ்க்கை ?
சாத்தியமே
இல்லை!!
பந்தயக் குதிரையோ
!
பாரம் சுமக்கும்
கழுதையோ!
வாழ்க்கையை
எதுவென்பாய் ?
திட்டமிட்டதை
மீறாமல்
வீட்டை கட்ட
முடியுமோ !
வாழ்வை நகர்த்த
முடியுமோ !
சாலை விதிகளை
மதிப்பதை
நீ மட்டுமே
செய்ய முடியுமோ !
வாழ்வின்
விதிகளையும்தான்.
உன் வாழ்வு
உன் கையில்தான்
உன் கையை
பிணைத்திருப்பவற்றின்
கட்டளையை
மீறல் எளிதோ ?
அனுபவத்துக்கு
மிஞ்சிய ஆசானும் இல்லை
எல்லா அனுபவமும்
ஒன்றாகவும் இல்லை
அவரவருக்கானதுதான்
அனுபவம்கூட.
சு.பொ.அகத்தியலிங்கம்
.
5/11/2022.
0 comments :
Post a Comment