நானும் பட்டிமன்றமும்
நேற்று செந்தில்நாதன் படைப்புலகம் குறித்து எழுதியபின் என்னுள் பல காட்சிகள் ஓடத்துவங்கின. அதில் ஒன்று பட்டிமன்றம்.
அவசரகாலம் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு நானும் பட்டிமன்றத்தில் ஆர்வம் காட்டலானேன். தமுஎச அறிமுகம் ,நங்கநல்லூர் இலக்கிய வட்டம் ,பெரம்பூர் கவின்கலை மன்றம் மற்றும் புதுவண்ணை ,ஆவடியில் சில அமைப்புகள் களம் அமைத்தன.
பரணீதரன் ,போக்குவரத்து தொழிலாளி தோழர் பவுன்ராஜ் ,வங்கித் தோழர் ஏழிசை வல்லி இவர்களோடு நான்.பெரும்பாலும் சமூகம் சார்ந்த தலைப்புகளே !
அவசரகாலத்தில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டபின் சவுந்தராசன் ,வரதராசன் வரமுடியாத சூழல். புதியவர்களை இணைத்து இலக்கியம் சினிமா தலைப்புகளாக்கி அதனுள் அரசியலை பொதிந்து வழங்கினோம்.
சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சென்னை. செங்கை மாவட்ட மாநாடுகளில் பட்டிமன்றம் ,கவியரங்கம் களைகட்டின.
ஒரு கட்டத்தில் செந்தில்நாதன் பணிச்சுமை காரணமாக வரஇயலாத போது நான் நடுவர் ஆனேன். குமரேசன் சென்னை வந்தபின் அவர் எங்களோடு இணைந்தார்.
கங்காதரனோடு இணைந்து மருத்துவ பிரதிநிதிகள் மாநில மாநாட்டில் பட்டிமன்றம் நடத்தினோம்.
பட்டிமன்றம் வியாபாரமாகவும் நேரம் கொல்வதாகவும் மாறிய சூழலில் பணிச் சூழலும் நெருக்க பட்டிமன்றத் தொடர்பு அருகியது.
ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து சிபிஎம் பிரச்சாரம் தொடங்கிய போது தோழர் டி.கே.எஸ் ,இரா.தெ.முத்து ,நான் ,ராதைவேறு சிலர் இணைந்து "வீதி விசாரணை"என் ஒரு ஏற்பாடு செய்தோம். நீதி மன்ற தோரணையை உருவாக்கி விசாரிக்கும் பாணி. முதலில் செந்தில்நாதனே நீதிபதி. நான் வழக்கு தொடுத்தேன். பெரியமேட்டில் அரங்கேற்றம். தொடர்ந்து பல இடங்களில் நடந்தது. ஒரு கட்டத்தில் நான் நீதிபதி ஆனேன். இந்நிகழ்வு பெரும் ஈர்ப்பைப் பெற்றது.
அப்புறம் கிட்டத்தட்ட பட்டிமன்ற தொடர்பு அறுந்து போனது.
கவியரங்க அனுபவம் ஏற்கனவே பதிந்துள்ளேன். தேடி மீண்டும் பதிவேன்
சுபொஅ.
0 comments :
Post a Comment