அறிவை இன்னும் கூர்தீட்டு !

Posted by அகத்தீ Labels:

 


அழிவை ஆராதிக்கிற தேசத்தில்

அறிவை இன்னும் கூர்தீட்டு !

காரணம் ஏன் எனும் அறிவுமிலார்

கண்கள் திறக்க கூர்தீட்டு !

 

கையில் விளக்குடன் கிணற்றில் வீழ்வோர்

கண்கள் திறக்க கூர்தீட்டு !

பொய்யில் புளுகில் மயங்கிய புண்ணியர்

மெய்விழி திறக்க கூர்தீட்டு !

 

தூங்கியதுபோல் நடிக்கும் மானிடர்

மெய்விழி திறக்க கூர்தீட்டு

சாதிமத பொய்மை இருட்டு கிழிய

அறிவை இன்னும் கூர்தீட்டு !

 

சுபொஅ.

9/11/2022.

 


0 comments :

Post a Comment