பழிதீர்ப்போம்...

Posted by அகத்தீ Labels:


பழிதீர்ப்போம்….


இவன் அப்பனை
அவன் அப்பன் கொன்றான்
நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாய்….

அவன் அப்பனை
இவன் பழிவாங்கினான் .
இவனை அவன் பழிவாங்கினான்

அவனை இவன் பிள்ளை
பழி தீர்த்தான் …. அவன் பிள்ளை
பழிதீர்க்க கொலைவாளுடன் அலைகிறான் ..

தலைமுறை தலைமுறையாய்
பழிதீர்க்கும் படலம் தொடர்கிறது
கண்ணுக்கெட்டிய தூரம்
முடிவு தென்படவில்லை ..

சு.பொ.அகத்தியலிங்கம்.


0 comments :

Post a Comment