கதை கேளு ! கதை கேளு !

Posted by அகத்தீ Labels:
கதை கேளு ! கதை கேளு ! கதை கேளு ! கதை கேளு !
கேழ்வரகில் நெய்வடிச்ச
கில்லாடி கதை கேளு !
                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
ஊழலை ஒழிச்ச கதை !
ஊரை ஏய்ச்ச கதை !
                                                    [ கதை கேளு ]


கதை கேளு ! கதை கேளு !
மோடி நடிச்ச கதை !
அதானி இயக்கும் கதை !
                                                    [ கதை கேளு ]


கதை கேளு ! கதை கேளு !
பறந்து பறந்து வளர்ந்த கதை !
சுரங்கத்தை விழுங்கும் கதை !

[ முன்னொரு காலத்திலே மோடி மோடின்னு ஒருத்தரு இருந்தாராம் ; அவரை 25 ஆயிரம் கோடி செலவு பண்ணி கில்லாடி ஆக்கினாராம் பரம எழைகள் அதானியும் அம்பானியும் .. அதற்கு நன்றிக்கடனாய் நாடு நாடாய் பறந்து அவங்க கேட்ட சுரங்கம் , போர்விமானத் தொழிற்சாலை  அப்படின்னு வாங்கிக்கொடுத்து குஷிப்படுத்தினாராம் அந்த கில்லாடி ]

கதை கேளு ! கதை கேளு !
ஆஸ்திரேலிய சுரங்கக் கதை !
அதானி வாங்குனகதை !

                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
ஆறாயிரம் கோடி கதை !
வங்கி கொடுத்த கதை !
[ இப்படி வங்கிப்பணத்தை எடுத்து சுரங்கம் வாங்கிக்கொடுத்தது ஊழலே இல்லை ..வளர்ச்சி .. விஜய மல்லையா மாதிரி வங்கியில பல ஆயிரம் கோடி வாங்கிட்டு மொதாலாளிங்க கட்டலைன்னா அது ஊழல் இல்லே .. அதுக்கு பேரு வளர்ச்சி .. யாருடா அவன் அங்கே கூச்சல் போடுறது .. யாருட்ட கொடுத்தா அவாள் வளருவாங்களோ அவங்களுக்குத்தான் கொடுக்க முடியும் ! ]

                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
அதானி சொத்து பெருத்த கதை !
ஒரே வருடத்திலே 250 சதம் வீங்கின கதை !

கதை கேளு ! கதை கேளு !
அஞ்சே அஞ்சு குஜராத்தி முதாளிங்க கதை!
அவங்க சொத்து இரண்டு மடங்கா ஆன கதை !

                                                    [ கதை கேளு ]

[  ஏழைகள் வளரணும்னா ! நல்லா உழையுங்கோ ! தலமுறை தலமுறையா உழச்சும் பலன் இல்லையா ? உங்க தலை எழுத்து ! பகவான நல்லா ஷேவிச்சுக்குங்கோ ! அடுத்த பிறவியில அதானியா பிறக்கலாம்.. ]

                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
 அமித் ஷா என்கவுண்டர் கதை !
அவரு விடுதலையான கதை !
                                                    [ கதை கேளு ]


கதை கேளு ! கதை கேளு !
நீதிபதி சதாசிவம் கவர்னர் ஆனகதை !
நீதியை விலைபேசி வாங்கும் கதை !

[ இந்த சதாசிவம் எல்லா நியாயத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு அமித் ஷா நிரபராதின்னு சொன்னார் அதுக்கும் கவர்னர் பதவிக்கும் உங்க அம்மா சத்தியமாய் சம்மந்தமே இல்லையாம் ! ]
                                                    [ கதை கேளு ]

கதைகேளு ! கதை கேளு 1
அருண் ஜெட்லி ஜெயா பார்த்த கதை!
வருமான வழக்கு முடிஞ்ச கதை !
                                                    [ கதை கேளு ]

கதை கேளு ! கதை கேளு !
குமாரசாமி கணக்கு போட்ட கதை !
ஜெயா விடுதலை ஆன கதை !

கதைகேளு ! கதை கேளு !
21 டன் நிலக்கரிய ஜெ ஆட்சி வாங்கும் கதை !
அதானி ஒப்பந்தம் போட்ட கதை !
[ தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு அதானியிடம் 21 லட்சம் டன் நிலக்கரி வாங்கப் போறாங்க ! அதானி வேறு மோடி வேறு ! தெரியாமல் உளறக்கூடாது ! நன்றிக் கடன்னு சொல்லி வழக்கு விடுதலைக்கும் இதுக்கும் முடிச்சுப் போடக்கூடாது ..]
                                                    [ கதை கேளு ]
இப்படியே கதை சொல்ல சொல்ல நீளும் ! இது என்ன வைகுண்ட ஏகாதேசியா ? சிவராத்திரியா எழுந்து போங்க !
                                                     [ கதை கேளு ]


- சு.பொ.அகத்தியலிங்கம்


1 comments :

  1. Chitra

    பாத்து சார், ஆட்டோ வந்துட போது.

Post a Comment