மாட்டுக்கறியும் அன்பான தோழர்களும் ------------- --------------- ----------- -------------

Posted by அகத்தீ Labels:

மாட்டுக்கறியும் அன்பான தோழர்களும்
------------- --------------- ----------- -------------

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - கேரளாவின் முன்னாள் முதல்வர் தோழர். இ.எம்.எஸ் வாழ்க்கை வரலாற்று நூலான நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்... வெளியீட்டு விழா கேரளாவில் நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் நடைபெற்றது.

நூலை வெளியிட்டுப்பேசிய அவர் சாதிய அடுக்கின் உச்சத்தில் இருக்கும் நம்பூதிரிபாட் குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ். தாழ்த்தப்பட்ட ஒரு தொழிலாளி வீட்டில் தலைமறைவாய் இருந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மாட்டுக்கறி மற்றும் நத்தை உணவை சாப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி எவ்வளவு அர்ப்பணிப்பு என வியந்தார்.

இறுதியில் இ.எம்.எஸ் வழங்கிய ஏற்புரையில், நம்பூதிரி சமுதாயம் எவ் வளவு பிற்போக்கானது என்பதை எடுத்துக்கூறி அந்த சமூகத்தில் பிறந்த தன்னையும் தோழனாக அங்கீகரித்த அந்த தொழிலாளித் தோழருக்கும் அவர் அன்று வழங்கிய அன்பான உணவுக்கும் நன்றிக் கடன்பட்டி ருப்பதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை ஒரு முறை வி.பி.சிந்தன் அரசியல் வகுப்பொன்றில் குறிப்பிட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது. நம்பூதிரி சாதியில் பிறந்தது பெருமைக்குரியதாக அவர் ஒருபோதும் கருதியது இல்லை.பூணூலை தான் அறுத்ததோடு தன் சகாக்களோடு சேர்ந்து பிற நம்பூதிரிகளின் பூணூலை அறுக்கிற போராட்டமும் செய்தவர். சுயசாதி மறுப்புதான் கம்யூனிஸ்டுகளின் பெருமை.

தமிழகத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எ.பாலசுப்பிரமணி யம் பிராமண சாதியில் பிறந்தவர். தன் வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.அவரின் தொழிற்சங்க பிரவேசம் தோல் பதனிடும் தொழிலாளர்களைத் திரட்டுவதில்தான் துவங்கியது. அப்படி அவர்களோடு தோள் இனைந்து நின்றபோது அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டதைப் பெருமையாகவே கருதினார். முதல் நாள் சாப்பிட்டபோது வாந்தி வந்ததாகவும் அது சாதித் திமிரின் அடையாளமாகக் கருதி மனம் வருந்தியதாகவும்.பின்னர் அந்த உண வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதையும் மகிழ்வோடு கூறியுள்ளார். தோல் நாவலில் அந்தக் காட்சியை அற்புதமாகச் சித்தரித் திருப்பார் டி.செல்வராஜ்.

சுடுகாட்டுப் பாதைகேட்டு அவர் நடத்திய போராட்டத்தின் போது மேல்சாதிக்காரர்களின் எதிர்ப்பை மீறி தடுப்புச் சுவரை உடைத்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பிணத்தை தானே சுமந்தார். இதனால் பிராமண சாதியினர் கண்டித்ததையும் ஏற்க மறுத்து தான் செய்தது உயர்வான செயல் என வாதிட்டார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டபோது பழைய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மேல் சாதியினர் வற்புறுத்தினர் தோழர் ஏ.பி. மறுத்ததோடு அதனால் தன்க்கு வாக்களிக்கவில்லை என்றாலும் கவலையில்லை என நெஞ்சு நிமிர்த்தி கூறினார்.

தஞ்சைத் தரணியில் சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவுகட்டி- பண்ணை அடிமைத் தனத்திலிருந்து விவசாயத் தொழிலாளிகளை மீட்ட பெருமை பி.எஸ்.ஆர் என அன்போடு அழைக்கப்பட்ட தோழர் பி.சீனிவாசராவ் அவர்களையே சாரும். அவர் பிறப்பால் கன்னடத்துப் பிராமணன்; கம்யூனிஸ்ட் கட்சி முடிவின்படி விவசாயிகளை அணிதிரட்ட தஞ்சை வந்தார் - அங்குள்ள அவலநிலை கண்டு நொந்தார். அவர்களோடு இரண்டறக் கலந்தார். அவர்கள் குடிசையில் தங்கினார் - அவர்கள் சாப்பிட்ட மாடு, நத்தை, மீன், நண்டு அனைத்தையும் சாப்பிட்டார். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் உறங்கி அவர்களில் ஒருவராய் ஆகிபோனார். கொடுமையை எதிர்த்துப் போராட நம்பிக்கை ஊட்டினார். கம்யூனிஸ்ட் தோழமையின் குறியீடாய் - தலைமைப் பண்பின் இலக்கணமாய் மாறி இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலே சொன்னதெல்லாம் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சில சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பூணூலை மட்டுமல்ல வர்ணாஸ்ரம சிந்தனையையும் அறுத்தெறிந்தவர்களே கம்யூனிஸ்டுகள், மரக்கறி உணவோ ,புலால் உணவோ எதுவாயினும் அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதுமில்லை: மாட்டுக்கறியோ பன்றிக்கறியோ எதுவும் இழிவானது அல்ல. யாருக்கு எது பிடிக்கிறதோ - எது உடலுக்கு ஒத்து வருகிறதோ அதை உண்ண வேண்டும். அதனை மறுக்கவோ இழிவுபடுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. வலுக்கட்டாயமாக யார் மீதும் எந்த உணவையும் திணிக்கவும் கூடாது. அதிலும் அடித்தட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கங் களையும் பண்பாட்டையும் மதிப்பதென்பது கம்யூனிஸ்ட் தோழமையின் மகுடம். அது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

தந்தைப் பெரியார் பெரிய அளவில் விளம்பரம் செய்து மாட்டுக்கறி பொது விருந்து வழங்குவதை தன் வாழ்நாள் முழுக்க வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பெருமையாக - சமூகசீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதினார். இவற்றையெல்லாம் அசைபோட்டுப் பார்க்கையில் மாட்டுக்கறி சாப்பிடுவதை இழிவென்ற கோணத்தில் எழுதுகிற வரும் சரி - அதை அவமானம் எனக் கருதும் தலைவரும் சரி - அதை அவ மதிப்பாகக் கருதி தீர்ப்பு வழங்கும் நீதிபதியும் சரி வர்ணாஸ்ரம் சிந்தனை எனும் பிற்போக்கு சங்கிலியிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.

-சு.பொ.அகத்தியலிங்கம்

11 comments :

  1. திசைசொல்

    உணவுப் பழக்கத்தை பற்றிய புரிதலுக்கு துணை செய்யும் பதிவு:மகிழ்ச்சி

  1. vimalavidya

    best message>>It should reach mass...

  1. kumaraguruparan

    பிராமண வகுப்பில் பிறந்ததாலேயே கம்யுனிசத்தலைவர்களைக் கொச்சைப் படுத்துவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.இதை மனதில் கொண்டு,பொறுமையாக, புதிய தலைமுறை இளைஞர்களுக்கு கம்யூனிசத் தலைவர்களின் சாதி மறுப்பு லட்சியம் ,உணவுப் பழக்கங்கள் குறித்த தெரியாத விடயங்களை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள்!..

  1. Eco Globe

    Social revolution is almost over - globalization brought everything at your home. Ethnic issues still remains a thorny issue along with religious division. However, caste polarization and caste movements in particular Dalit movements accuse brahminisation of other upper caste hindus for their lower social status. Even though brahmins are not directly responsible for caste atrocities, they are blamed for moral responsibilities. Brahmins are also not involving themselves to help to get rid caste rivalries among other hindu brethern. This is the major barrier to alleviate their allegations over negative role.

  1. kumaresan

    போற்றுவோம், தொடர்ந்து நிலைநாட்டுவோம் இந்தப் பெருமை மிகு பாரம்பரியத்தை.

  1. idleman

    //யாருக்கு எது பிடிக்கிறதோ - எது உடலுக்கு ஒத்து வருகிறதோ அதை உண்ண வேண்டும். அதனை மறுக்கவோ இழிவுபடுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. வலுக்கட்டாயமாக யார் மீதும் எந்த உணவையும் திணிக்கவும் கூடாது// இதுவும் உண்மை. நன்று.

  1. swaeoop tagore

    history is the greatest document to prove that brahmins were perpetrators of caste hatred.what they sowed years before is being harvested by hindutva politicians.what about cho? who is he? does he not degrade the tamil sentiments? did ram not publish distorted versions and facts about tamils in lanka? where is the truth? today after reservations the brahmins have to give way to others to lead a secluded life.They were the root cause for fomenting caste hatred and superiority.

  1. trg

    Dear Akathi:
    I was surprised about eating snails mentioned
    in your article. Is such a practice there in Kerala?
    What kind of snails be eaten?

  1. Unknown

    காலத்திற்கேற்ற பதிவு....

  1. மணிச்சுடர்

    உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களில்
    பேதம் ஓதும் பேதைகளின் நெஞ்சத்து
    உணர்வுகளில் மனிதநேயம் மிளிருமோ?
    பாவலர் பொன்.க. புதுகை

  1. Thoduvanam

    மிகவும் சிந்திக்க வைக்கின்ற பதிவு ...

Post a Comment