அகத்தேடல்-9

Posted by அகத்தீ

அகத்தேடல்-9

ஆணென்ன பெண்ணென்ன
ஆழங்காண முடியா மனதுக்கு..

உள்ளொன்று வைத்து
உதடொன்று பேசும்
விதி விலக்கு
யாரென்று கூறு..

நானென்றும்
நீயென்றும்
நாமென்றும்
வார்த்தை ஜலதரங்கம்

தன்னலம்கருதா
மனிதர் யாரு?
தன்னலம் என்பதன்
பொருள்தான் ஏது?

தான் வாழ தனைக் காக்க
சொல்கின்ற பொய்களும்
செய்கின்ற செயல்களும்
தவறென்று சொல்லலாமா?

தான் மட்டும் வாழ
தனைச் சுற்றி
ஜால்ராக்கள் பாட
வாழுவது தன்னலம்

லாபம் சுபம் தனக்கு அதுபோதும்
சமுதாயம் கெட்டொழிந்து போயினும்
தனக்கென்ன என வாழல்
தன்னலத்தின் உச்சம்

தன்னல மறுப்பு வேறு
தன்னைச் சுருக்குதல் வேறு
உன்னை இழந்தபின்
ஊருக்கு உழைத்தல் எங்ஙனம்?

தன்னலத்தின் சூத்திரத்தை
சரியாக உணராமல்
தன் இருத்தலை உணர்த்தாமல்
தடயமற்றுப் போனோருண்டு..

யோசித்துப் பார்க்கையில்
எதிரொலிக்கும் பெருமூச்சு
உள்மனதின் குரல் கேழு
இனியேனும் விழிப்பாய் இரு

சரி சரி இனி விழித்து என்செய்ய
பிழைக்கத் தெரியாதவன் இவனென
மனைவியும் மக்களும்
உற்றாரும் உறவும் பேசட்டுமே

வராலாற்றில் பதிய
உனக்கென்ன இருக்கிறது
மூச்சடங்கும்வரை உன்
முத்திரை தொடரட்டும் இப்படியே..

காலவெளியில் உன்
கால் பதித்த அடையாளத்தை
காலமெல்லம் தேடு
கண்டுகொள்ளாமல் ஓயாதே..
2 comments :

 1. Unknown

  //காலவெளியில் உன்
  கால் பதித்த அடையாளத்தை
  காலமெல்லம் தேடு
  கண்டுகொள்ளாமல் ஓயாதே..//
  அர்த்தம் பொதிந்த வரிகள்...

 1. Unknown

  அகத்தேடலில் இது முகத்தேடல்.மாசுகளில் மறைந்திருக்கும் மனித பண்புகளை வெளிக்கொணர விரும்பும் கவிதை வரிகள்.முகம் தெரியாமல் முகவரிகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்...... மனோவியம்

Post a Comment