அய்யலு பற்றி

Posted by அகத்தீ Labels:

 இன்று காலை துளசி நாராயணன் தன்  தந்தை அய்யலு பற்றி நினைவுகூர்ந்தார்.  என்னுள் நினைவலைகள் கொப்பளித்தன.


ரயில் நிலையத்தில் எப்போது சந்தித்தாலும் டீயோ டிபனோ சாப்பாடோ வாங்கி சாப்பிட வைக்காமல் ஒரு போதும் அவர் என்னை அனுப்பியதில்லை. என் மீதும் வாலிபர் சங்கத்தின் மீதும் அளவுகடந்த வாஞ்சை காட்டியவர்.

தாம்பரம் பீச் மின் ரயில் ஓரு காலத்தில் மீட்டர் கேஸ்தான். அகலரயில் பாதை கிடையாது. நெரிசல் அதிகம். 

பீச் தாம்பரம் மின் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும். பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.பெண்களுக்கு தனிப் பெட்டி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிகைகளோடு வாலிபர் சங்கமும் மாதர் சங்கமும் கூட்டாக களத்தில் இறங்கின.  கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டத்தில் இறங்கியது.

இப்போராட்டத்திற்கான விவரங்கள் தந்து வடிவம் கொடுத்ததில் பெரும் பங்கு தோழர்கள் அய்யலுவுக்கும் இளங்கோவுக்குமே! 

ரயில்வே பொதுமேலாளர் கோவில் பிள்ளை எங்கள் மனுவை கனிவுடன் விவாதிக்க அய்யலு உடன் நின்றார்.

உடனடியாக எட்டு பெட்டிகள் ஓண்பது பெட்டிகள் ஆனது. பெண்களுக்கு தனிப் பெட்டி வந்தது. அகல ரயில்பாதை பேசுபொருளானது. பின்னர் வெற்றியும் பெற்றது.

1978 -81 காலகட்டத்தில் நடந்த அந்த மகத்தான போராட்டத்தில் எம்மோடு நின்று வழிகாட்டி நெறிப்படுத்திய தோழர் அய்யலுவை மறக்க முடியுமா?

இன்று அந்த அகல ரயில் பாதையில் பயணிக்கும் எத்தனைபேர் எங்கள் போராட்ட வியர்வையை அறிவர்?


சுபொஅ.
13/2/2022.

Attachments area

0 comments :

Post a Comment