இரண்டாம் மெட்ராஸ் ,

Posted by அகத்தீ Labels:

 இளையோர் நாவல் என பிரகடனப்படுத்திக் கொண்டு வந்துள்ள “ இரண்டாம் மெட்ராஸ் “ வளரிளம் பருவத்தினர் [ டீன் ஏஜ் பருவத்தை நெருங்கும் வயதினரை ] மனதில் வைத்து நாவல் புனையும் முயற்சி . நன்று !பாராட்டுக்கள் !

டிராவல் மெஷின் எனப்படும் காலங்களைத் தாண்டியும் பின்னாலேயும் பயணிக்கும் ஓர் அறிவியல் இயந்திரத்தில் பயணிக்கும் கற்பனையோடு வரலாற்றையும் கடந்த காலத்தையும் சொல்ல முனைந்திருக்கிறார் .
இப்படி ஒரு இயந்திரக் கனவு டைம் மெஷின் தமிழ் சினிமாவில் ,டிக்கிலோனா ‘ படம் மூலம் ஏற்கெனவே அறிகமாகியுள்ளது . ஆயின் அந்த மெஷினை வைத்து வேலூர் புரட்சியை சொல்வதுதான் சிறப்பு .
வித்தியாசமான கதைக்களம் ,கதைக் கரு என முயற்சித்து இருப்பது பாராட்டுகள் . இளையோர் படித்து கருத்து சொல்லட்டும் ….
இரண்டாம் மெட்ராஸ் ,
[இளையோர் நாவல்]
ஆசிரியர் : துரை ஆனந்த் குமார் ,
வெளியீடு : வாசகசாலை .
பக்கங்கள் : 80 , விலை : ரூ.100/
தொடர்புக்கு :9942633833 / 9790443979
- சு.பொ.அகத்தியலிங்கம் . 6/3/2022.
May be a cartoon of 2 people

Like
Comment
Share

0 comments :

Post a Comment