கட்சி உறுப்பினர் தகுதி
கட்சி உறுப்பினர் தகுதியை ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டும். இது சிபிஎம் விதி.
1974 ஆதரவாளர் குழு உறுப்பினராகச் சேர்ந்து பின்னர் ஆண்டுதோறும் புதுப்பித்து வருகிறேன்.
மீண்டும் இவ்வாண்டும் புதுப்பித்துக் கொண்டேன் உற்சாகமாக.
முதன் முறையாக படிவம் பூர்த்தி செய்யும் போது இருந்த அதே உற்சாகம் சற்றும் குறையவில்லை. ஆனால் புரிதல் அதிகரித்திருக்கிறது. மேம்பட்டிருக்கிறது. இன்னும் நாம் போக வேண்டியது நெடுந்தொலைவு எனும் மாபெரும் உண்மை உறைத்திருக்கிறது.
நான் வாழுங்காலம் வரை என்னாலியன்ற வழியில் உழைப்பேன். இளையதலைமுறை இன்னும் வலுவாய் இன்னும் கூர்மையாய் இன்னும் வீரியமாய் முன்னெடுப்பார்கள்.
பழுதற்ற லட்சியம், உறுதியான அமைப்பு, அளப்பரிய தியாகம், மக்களோடு இயைந்த வாழ்வு என உறுதியாக முன்னேறுவார்கள்.
நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினன். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் எனக்கு!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
13/3/2022.
0 comments :
Post a Comment