உரைச் சித்திரம் : 3.
குறை நிறைகளோடு பழகுவோமே !
ஒவ்வொரு மரத்துக்கும்
ஓர் இயல்பு உண்டு . அதை நம் சமூகம் நன்கறியும் .
கமுகு மரத்தை அதாவது
பாக்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ; நாள் தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் . அப்போதுதான்
காய்த்துக்கொண்டே இருக்கும் .தண்ணீர் பாய்ச்சுவது நின்றுபோனால் காய்ப்பதும் நின்று
போகும் .
தென்னை மரத்தை
எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வப்போது அதாவது விட்டு விட்டு நீர் பாய்ச்சினும் காய்ப்பதை
நிறுத்தாது .
அதே வேளை பனை மரத்தை
எடுத்துக் கொள்ளுங்கள் எப்போதோ பாய்ச்சிய தண்ணீருக்கு காலம் முழுவதும் பயன் தரும்
.
நட்பும் அப்படித்தான்
. சிலர் நட்பு பாக்கு மரம் போன்றது , பணத்தால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே
நட்பு நீடிக்கும் . சற்று வற்றினாலும் நட்’பூ’ உலர்ந்து உதிர்ந்து விடும்.
சிலர் நட்பு தென்னை
போல அவ்வப்போது அதாவது வாய்ப்புள்ள போது மட்டும் பணமோ உதவியோ செய்து மகிழ்ந்தால் போதும்
; காலம் நெடுக நட்’பூ’ புன்னகைக்கும் .
சிலர் நட்பு பனை
போன்றது . எப்போதோ செய்த ஒன்றை வாழ்நாள் முழுவதும் மறவாது கொண்டாடும் .குதுகலிக்கும்
.நட்’பூ’ மணம் வீசிக்கொண்டே இருக்கும் .
இந்த நட்பு நீடிக்க
என்ன செய்ய வேண்டும் ?
அரிசியாக அப்படியே
விளைவதில்லை . நெல்லாகவே விளையும் .நெல்லில் உமி இருக்கும் . உமியை நீக்கித்தான் அரிசியை
எடுக்க வேண்டும் . உமி இருக்கிறது என்பதால் அரிசி வேண்டாம் சோறு வேண்டாம் எனச் சொல்ல
முடியுமா ?
பொங்கிப் பாயும்
தண்ணீரில் நுரை கொப்பளித்து வரும் .எனக்கு நுரை பிடிக்காது எனவே தண்ணீரே வேண்டாம் எனச்
சொல்வோமா ?
அழகிய பூவாயினும்
அங்கு அதில் புல்லி வட்டம் இருக்கும் , ரோஜா பூவை எடுத்தால் முள் இருக்கும் . ஆதலால்
பூக்களை வெறுப்போமோ ?
நாம் நண்பராக வாரி
அரவணைத்தவரிடமும் சில குற்றங் குறைகள் இருக்கும் . குற்றங் குறை இல்லாத மனிதர் யார்
? குற்றம் பார்க்கின் சுற்றம் உண்டோ ? நட்பு உண்டோ ?
காதலாயினும் நட்பாயினும்
குறை நிறைகளோடு ஏற்கப் பழகுவதுதானே வாழ்வை இனிதாக்கும் ! சின்னச் சின்ன குற்றங்களைக்
கண்டு வெறுக்கத் துவங்கினால் ஒவ்வொருவரும் தனித்தே இருக்க வேண்டியதுதான்.
நாம்தான் அணை கட்டுகிறோம்
.தண்ணீரைத் தேக்குகிறோம். ஏதோ காலச் சூழலால் அணை உடைந்து நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது
. கோபப்பட்டு என்ன செய்ய ?
அதற்காக மீண்டும்
அணை கட்டாமல் இருக்க முடியுமா ?தண்ணீரைத் தேக்காமல் இருக்க முடியுமா ?
சில நேரங்களில்
நாம் விரும்பி நட்பு கொண்டோர் நாம் வெறுக்கும் சில செயல்களைச் செய்துவிடக்கூடும் .
சொற்களைக் கொட்டிவிடக்கூடும் . அந்த ஒன்றைச் சொல்லியே நட்பை காவு கொடுக்க இயலுமா ?
காதலுக்கும் இதுவே !
நல்லதும் கெட்டதும்
கலந்ததுதான் – அதாவது பிளஸ் அண்ட் மைனஸ் இரண்டும் கலந்துதான் நட்பும் காதலும் .அப்படியே
ஏற்பதும் தொடர்வதுமே வாழ்க்கையின் வெற்றி !
இப்படி எல்லாம்
நம்மை செப்பனிடும் நல்ல வழிகாட்டியே சங்க இலக்கியங்கள் .நாலடியார் வரைந்த சில செய்திகளை
இங்கு தீட்டிக் காட்டினேன் .
நீங்களும் அசை
போடுங்கள் !
கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை |
216 |
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை |
221 |
செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார் |
குறை நிறைகளோடு
மக்களை அரவணைக்கப் பழகுவோமே !
சு.பொ.அகத்தியலிங்கம்
.
24/3/2022.
0 comments :
Post a Comment