கூடவே வரும் நிலா

Posted by அகத்தீ Labels:

 “ விடை பெற /முடியாக் /கேள்விகளின் /விடைகள் / பயணத்தில் /பதிந்திருக்கலாம்..” என்ற நம்பிக்கையோடு ஸ்ரீ நிரா தன் கவிதைப் பயணத்தை “கூடவே வரும் நிலா “ மூலம் துவக்கி இருக்கிறார் .

“ பயணங்கள் என் உளிகள் .நடைப்பயிற்சி நேரம் என் தனி வெளித் தருணம் .அந்தப் பொழுதுகளில் என்னை நான் செதுக்கிக் கொள்வேன் .” என்கிற ஸ்ரீ நிரா ,அவ்வாறு செதுக்கியவற்றில் தொகுப்பே இக்கவிதை நூல்.
வந்து குவியும் கவிதை நூல்களில் இதுவும் ஒன்றெனினும் , “கவிதை எனும் பேரிலக்கிய வடிவத்தின் முதல் வாசலில் நுழைவதற்கான கடவுச் சீட்டாக இந்நூலை ஆத்மார்த்தி பார்த்துள்ளார் .
“ வானத்தை விழிகளாலும்
பூமியைக் கால்களாலும் அளந்தேன்” என்கிற வழக்கறிஞரான கவிஞரின் படைப்புகளுக்கு வாழ்த்துரை வழங்கிய நீதிபதி எஸ் விமலா “அதிகாலை பயணத்தில் தொடங்கி அந்தி மயங்கி இருள் கவியும் நேரத்தில் தன் படைப்பை முடித்திருக்கிறார் ஸ்ரீ நிரா “ என சான்று வழங்கியபின் இன்னொரு அறிமுகம் தேவையா ?
கூடவே வரும் நிலா
ஸ்ரீ நிரா
பக்கங்கள் : 132 , விலை : 130 /
தொடர்புக்கு : ssrlawoffice@yahoo.co.in
சுபொஅ,
May be an image of 1 person, book and text

4 Comments
Like
Comment
Share

0 comments :

Post a Comment