undefined
undefined
சுயதரிசனம்
Posted by
வெற்றி முக்கியம்
வாழ்தல் அதினினும் முக்கியம்
விட்டுக்கொடுத்தலும் சமரசமுமே
வெற்றியின் ரகசியம்
பொய் சொல்லலாம்
உரிய பயன் உண்டெனில்..
காக்காபிடித்தலும் தவறல்ல
ஜால்ரா அடிப்பதும் பிழையல்ல
படிக்கட்டில் ஏறிக்கொண்டே இரு
அதுதான் அதுதான் முக்கியம்
செயலில் முன்முயற்சிமட்டும் போதா
தன்னை முன்னிலைப் படுத்தல்
தவிர்க்கமுடியா வெற்றிவிதி
வென்றால் உன் செயல்கள்
திறமையாய் மெச்சப்படும்
வீழ்ந்தால் உன் நியாயங்கள்கூட
தலைக்கனம், வீம்பு
பிடிவாதம்,உதவாக்கரை
இன்னும் என்னென்னவோ..
வென்றவன் சரிதம் முழுதும்
புகழ்போதையும்
பொய்மையும் நிறைந்தது
அதில்
கற்பதற்கு எதுவுமிருக்காது
தோற்றவனின் காயங்களில்
ஆயிரம் சேதி உண்டு
ஆனாலும்
யாரும் கேட்பதில்லை
காலம் கடந்து புரிகிறது
இதுவும்
தோல்வியின் நியாயமோ
- வழிப்போக்கன்