பெருங்கனவு
யாரும்
எழுதாத கவிதையை
நான் எழுத
வேண்டும் .
யாரும் வரையாத
ஓவியத்தை
நான் வரைய
வேண்டும்.
யாரும் இசைக்காத
பாடலை
நான் பாட
வேண்டும்.
யாரும் பயணிக்காத
திசையில்
நான் பயணிக்க
வேண்டும்.
இயற்கையில்
எல்லையற்ற ஆற்றலை
நீ பாடி முடித்து
விட்டாயா ?
இயற்கையின்
வண்ணங்களை வனப்பை
நீ தீட்டி
முடித்து விட்டாயா ?
இயற்கையின்
எண்ணற்ற சங்கீதத்தை
நீ நகலெடுத்து
முடித்து விட்டாயா ?
இயற்கையின்
ஆழத்துள் விரிவினுள்
நீ பயணித்து
முடித்துவிட்டாயா ?
மானுடத்தின்
வற்றா துயரத்தினை -உன்
கவிதை முற்றாக
சொல்லி முடியவில்லை.
மானுடத்தின்
முடிவற்ற பன்முகத்தை –உன்
தூரிகை இன்னும்
தீட்டி முடியவில்லை.
மானுடத்தில்
முடிவுறா கனவுகளை –உன்
பாடலில் இசைக்கவே
இல்லை .
மானுடத்தில்
எல்லையற்ற சக்தியை – உன்
பயணம் இன்னும்
நெருங்கவே இல்லை.
நாள்தோறும்
புதியன விரும்பு
நாள்தோறும்
பழமையை மீறு
நாள்தோறும்
துணிந்து முடிவுசெய்!
நாள்தோறும்
எதிர்நீச்சல் போடு
நாள்தோறும்
அறிவினைத் தேடு
நாள்தோறும்
அநீதியை எதிர் !
நாள்தோறும்
அன்பை விதை!
நாள்தோறும்
மானுடம் போற்று !
சு.பொ.அகத்தியலிங்கம்.
24 /10 /2022.
0 comments :
Post a Comment