அதைச் சாப்பிட்டால்

Posted by அகத்தீ Labels:

 (ஆர் எஸ் எஸ் மோகன்பகவத் எதை எதை எப்படி எப்படி சாப்பிடலாமென போதனை செய்கிறார். ரயிலில் வெங்காயம் பூண்டு இல்லாத தசரா உணவு விற்பனையாம். எல்லோரின் சாப்பாட்டுத் தட்டையும் பிடுங்கி மோந்து பார்த்து குப்பையில் வீசுவானாம் சங்கீஸ். இப்பின்னணியில் இக்கவிதையை வாசிப்பீர் !)

அதைச் சாப்பிட்டால்
கோபம் மிகுமாம்.
இதைச் சாப்பிட்டால்
காமம் மிகுமாம்.
அப்படிச் சாப்பிட்டால்
புத்தி கோணலாகுமாம்.
இப்படிச் சாப்பிட்டால்
ஞானம் ஜொலிக்குமாம்.
அதையெல்லாம் தவிர்த்தால்
சாந்தம் புன்கைக்குமாம்.
இதையெல்லாம் உண்டால்
கொடூரம் குடியேறுமாம்.
எதையேனும் சாப்பிடக் கொடுங்களென
கெஞ்சும் அவன் குரல்
காதில் விழவில்லையா ?
கோமியத்தைக் குடித்து
சாணியை விழுங்கினால்
போஜாக்கு பெருகுமென
போதனை செய்வீர்களோ ?
சனாதன எடைக்கல்லும்
மநுதர்ம முழக்கோலும்
அளந்து காட்டியபடி
சாப்பிட்ட சன்னியாசிகளிடமும்
காவி சங்கிகளிடமும்
சாந்தமும் தென்பட வில்லை
ஞானமும் தென்பட வில்லையே !
அது இருக்கட்டும்
கும்பமேளாவில் கூடும்
அகோரிகளின் பிரிய வஸ்து
கஞ்சா எவ்வகை உணவு ?
நிர்வாணம் எவ்வகை நாகரீகம் ?
உணவு சனாதனம் பேசும்
காவி சங்கி வெறியர்களே!
எங்கள் வாயில் உங்கள்
கைகளை நுழைக்காதீர்கள் !
சுபொஅ.
1/9/2022.

0 comments :

Post a Comment