இந்தியாவை வெள்ளை அரக்கன் திருடிட்டு போய்

Posted by அகத்தீ Labels:

 


இந்தியாவை வெள்ளை அரக்கன் திருடிட்டு போய் கடலுக்கடியில் ஓழிச்சு வச்சுட்டாரம்.

இந்தியாவைத் தேடி ஒரு ரிஷி ஆயிரம் ஆண்டுகள் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல் தவம் இருந்தாராம். 

தவத்தில் மனம் உருகிய பரசுராமர் கடலை நோக்கி அம்புவிட்டாராம். கடல் கிழிந்து இந்தியா வெளியே தெரிஞ்சுதாம்.  

கிருஷ்ண பருந்து தூக்கிட்டு வந்து இங்க போட்டிச்சாம். 

அப்போ அங்கே நேரு குடும்பம் ஒரு நாற்காலியில ஏறி உட்கார்ந்துகிச்சாம். இதனால் பீடை புடிச்சுகிச்சாம். 

மோடின்னு ஒரு மந்திரவாதி கோமியத்தை தெளிச்சு பீடையை விரட்டிக்கிட்டு அங்கே உட்கார்ந்தாரம். 

இதனால் மனம் மகிழ்ந்த ஏழரைச் சனி ஆரம்பம் ஆச்சாம். வாக்குச்சனி போக்குச்சனி மூக்குச்சனி அழுக்குச்சனின்னு காலம் ஓடிக்கிட்டே இருந்திச்சாம்.

மாட்டுச்சாணியை சாப்பிட்டு மாட்டு மூத்திரம் குடிச்சு மக்களெல்லாம் சந்தோஷமாக இருந்தாங்களாம்.

சுபம்.

( மக்கள் கேட்டுக் கொண்டதால் இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை புளுகுனி புராணத்திலிருந்து எடுத்து பாட புத்தகத்தில் சேர்த்தார்களாம்.)

சிரிக்காதீங்க!!!!   நாளை இதை ஆராய்ந்து பிஎச்டி வாங்கப் பாருங்க!!!! 

சுபொஅ.
13/8/21

0 comments :

Post a Comment