ஆழ்கடலின் கீழெவர்க்கும் அறிய முடியாமல்

Posted by அகத்தீ Labels:

 



ஆங்கிலக் கவிஞன் தாமஸ் கிரே ஒரு கிராமத்தின் கல்லறை பற்றி எழுதி அழியாப் புகழ்பெற்றான். அந்தக் கல்லறைத் திடலில் மாய்ந்து போன அரிய திறமைசாலிகளை நினைத்து ஓர் இரங்கல் கவிதை வரைந்திருக்கிறான் தாமஸ் கிரே . அவனது கவிதையைத் தழுவிக் கவிமணி சுருக்கமாகச் சிலவரிகள் எழுதியிருக்கிறார் .
ஆழ்கடலின் கீழெவர்க்கும்
அறிய முடியாமல்
அளவிறந்த ஒளிமணிகள்
அமிழ்ந் துறையும் அம்மா !
கடல் சூழ்ந்த உலகு புகழ்
காவியம் செய்யாமல்
கண்மூடும் கம்பருக்கோர்
கணக்கில்லை அம்மா !
என ஏக்கம் ததும்ப எழுதிய கவிமணி முத்தாய்ப்பாய் சொல்லுவார் :
தக்க திறனிருந்தும் –நல்ல
தருணம் வாய்த்தில தேல்
மிக்க புகழெய்தி –மக்கள்
மேன்மை அடையாரம்மா !
மேலே சுட்டப்பட்டவை கவிஞர் சிற்பி எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை . “ அருந்திறல் பெரும் பேராசிரியர் மு.அண்ணாமலை” என தம் ஆசிரியர் குறித்து பதிப்பித்த நூலில் எழுதியவையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . .
சுபொஅ.
9/12/2023.

0 comments :

Post a Comment