வாலிபர் சங்கத்தில்
நான் இயங்கியபோது தஞ்சையில் என்னோடு இயங்கிய தோழர்களில் ஒருவர் பக்கிரிசாமி .களப்போராளி
. அவர் கடும் முயற்சி செய்து தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை சுண்டக் காய்ச்சிய
குறிப்புகளாய் ஓர் சிறு நூலாய்த் தந்துள்ளார் .அவர் முயற்சிக்குப் பாராட்டுகள் .
தஞ்சையின்
அன்றைய நிலைமை ,கட்சி துவக்கம் , மாநாடுகள் ,போராட்டங்கள் ,தியாகிகள் . சதிவழக்குகள்
,வெண்மணி என பதினொரு அத்தியாயத்தில் பல குறிப்புகளைத் தொகுத்துள்ளார் . ஒரு பருந்துப்
பார்வையில் வரலாற்றைப் புரிய இது உதவும் என்பதில் ஐயமில்லை .
அதே வேளை
, தகவல்களை தக்க ஆவணங்களோடு ஒப்பிட்டு திருத்தம் செய்ய வேண்டும் . என் முதல் பார்வையில்
பல தகவல் பிழைகளும் விடுபடுதலும் இருப்பதாய் உணர்ந்தேன் .ஒப்பிட்டு சொல்ல ஆவணங்கள்
என் கையிருப்பில் இல்லை . எடுத்துக் காட்டாய் பாரதிமோகனுக்கு பின் செல்லமுத்து கட்சிச்
செயலாளராய் இருந்ததாய் என் நினைவு .[ சரிபார்க்கப்பட வேண்டும்] அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்
விபரங்கள் சரியாக தொகுக்கப்படவில்லை . இன்னும் ஒரு முறை தகவல்களை சரிபார்த்து அடுத்த
பதிப்பில் செப்பம் செய்யவும்.
முன்னுரையில்
வெ.ஜீவகுமார் தான் எழுத திட்டமிட்டதாகக் கூறியுள்ளார் .எழுதுக ! எழுதுக ! பல நூல்கள்
வருவது தேவையே .புதிய கோணங்களும் செப்பம் செய்யப்பட்ட தகவல்களும் இடம் பெறட்டும்.
தோழர் ச.தமிழ்ச்
செல்வன் தஞ்சை மாவட்ட போராட்ட வரலாற்றை எழுதப் பணிக்கப்பட்டதையும் ; அவரும் ஏற்றுக்கொண்டதையும்
அறிவேன் .காலம் நகர்கிறது .நானும் இரண்டு மூன்று ஆண்டுகளாய் கேட்டு வருகிறேன் .இந்த
ஆண்டு இந்த ஆண்டு என கடத்திவிட்டார் .அண்மையில் கேட்டபோது மூன்று மாதங்களில் வரும்
என உறுதி சொன்னார் .கவின் மலருக்கும் அதையே சொல்லியுள்ளார் .ஆவலுடன் எதிர்பார்ப்போமாக
!
சென்னை மாவட்ட
கட்சி வரலாற்றை எழுத யார் முயற்சிப்பார் ? . தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுத முன்வந்த
போதும் சில தலைவர்களின் பெருத்த கனவால் தடை பட்டது .இப்போது அவரும் இயற்கை எய்திவிட்டார்
. யாரையும் கட்சி பணிக்கவும் இல்லை .இப்போது ஆறு மாவட்டக்குழுக்கள் முடிவெடுக்கணும்
. தோழர் பக்கிரிசாமி எழுதியதுபோல் ஓர் சிறு நூலாவது வருமா ? நம்பிக்கை அருகில் இல்லை.
தஞ்சை மாவட்ட
செங்கொடி வீரகாவியம் ,
ஆசிரியர்
: தஞ்சை கே.பக்கிரிசாமி ,
வெளியீடு
: பொன்னி , தொடர்புக்கு :4 ஏ ,பூபதி நகர் ,கீழ்க்கட்டளை , சென்னை 600 117. Email :
vivekdushy@gmail.com பக்கங்கள் : 78 , விலை : ரூ. 100/
0 comments :
Post a Comment