என்றும் எங்கும் ..
அவனை
வழியனுப்பும்
போது
ஞாபகமாக
ஜோல்னா
பையை
தோளில்
மாட்டிவிடுங்கள்
இல்லாவிடில்
அடையாளம்
தெரியாமல்
குழம்பிவிடுவார்கள்
!
அந்த ஜோல்னா பையில்
நான்கு
ஐந்து
புத்தகங்களை
போட்டு
அனுப்ப
மறக்க வேண்டாம்!
இல்லாவிடில்
புத்தகங்களைத்
தேடி
மீண்டும்
பூமிக்கு
அவன்
வந்துவிடக்கூடும் !
பூதவுடலுக்கு
குல
வழக்கம் ,
குடும்ப
சம்பிரதாயம்
சாதி
,மத சடங்குகள்
எதையும்
செய்துவிடாதீர் !
மீறிச்
செய்தால்
பிணமும்
எழுந்து நின்று
போராடத்
தொடங்கிவிடும் !
செங்கொடி போர்த்தி
அனுப்பி
வையுங்கள்
சொர்க்கமோ
நரகமோ
அநீதியும்
அறியாமையும்
தாண்டவமாடும்
இடமெங்கும்
போராட
கொடி வேண்டும்
அவன்
என்றும் எங்கும்
போராளிதானே
!
புண்ணிய நதியில்
கரைத்தோ
புனித சமாதி
எழுப்பியோ
அவனை காயப்படுத்தி
விடாதீர்!
மருத்துவ
மாணவர் கற்க
உடல் தானமாகுக
!
இறந்தும்
பாடமாவான் !
அவன்
படத்துக்கு
படையல்
போடுவதோ
நாயக
பிம்பத்தை
கட்டமைக்கவோ
வேண்டாம்!
நினைவுகள்
காலவெளியில்
கரைந்து
போகட்டும் !
முளைத்தெழட்டும்
முன்னிலும்
வீரியமான
புதிய தலைமுறை !
சுபொஅ.
[ 2023 மே
மாதம் எழுதியது .ஏனோ பதிவிடாமல் இருந்துள்ளேன் . 12/12/23 ல் பதிவிடுகிறேன். செண்டிமெண்டாக
யாரும் வாசிக்க வேண்டாம் . ]
0 comments :
Post a Comment