இருப்பதே பாக்கியம் !
நீயாக எதையும்
பாராதே !
மாமன்னர்
சுட்டுவதை மட்டும் பார்!
நீயாக எதையும்
பேசாதே !
மாமன்னர்
சொல்வதை மட்டும் பேசு !
நீயாக எதற்கும்
காது கொடுக்காதே !
மாமன்னர்
சொல்வதை மட்டும் கேள் !
நீயாக எதையும்
சிந்திக்காதே !
மாமன்னர்
சிந்திக்கிறார் ! நீ மவுனமாயிரு !
ஆனால்,
நீ ! சுதந்திர
மனிதன் உன் உரிமையை
மாமன்னர்
நினைவூட்டுகிறார் !
நீயாக வேலை
தேடு ! கடுமையாக உழை !
பலனை எதிர்பாராதே
! உழைப்பதே உன் கடன் !
உனக்காக மாமன்னர்
சாப்பிடுகிறார் !
நாட்டுக்காக
நீ உணவை தியாகம் செய் !
மாமன்னர்
ராஜ்யத்தில் இருப்பதே பாக்கியம் !
வாழ்வதைப்
பற்றி மனதாலும் நினையாதே!
சுபொஅ.
26/3/2023.
0 comments :
Post a Comment