வாழப்பழகு
! புதிதாக சிந்திக்கப் பழகு ! – 2
நீங்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் டுவிட்டர் ,முகநூல் ,யூ டியூப் ,இன்ஸ்டிரோகிராம் என சமூக ஊடகங்கள்
உங்களிடம் வந்து சேர்ந்துவிடும் .ஓடி ஒளியவே முடியாது.
அவை அள்ளிக்கொட்டுகிற
ஒவ்வொன்றையும் நீங்கள் நம்பினால் பைத்தியம் பிடித்துவிடும் . நம்பாவிட்டால் இயந்திரமாகி
விடுவீர் ! என்ன செய்வது ?
யார் சொல்கிறார்
? என்ன சொல்லுகிறார் ?எங்கு சொல்கிறார் ? ஏன் சொல்கிறார் ? எப்படிச் சொல்கிறார் ? யாருக்கு
சொல்லுகிறார் ? இப்படி கொஞ்சம் கேள்வி எழுப்பி தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுவதே சமூக
ஊடக உலகில் வாழும் வழி !
Character assassination எனப்படும்
தனிநபரை இழிவு செய்யும் பதிவுகள் , சாதி ,மத வெறுப்பு அரசியல் , ஆனாதிக்கப்
பதிவுகள் , சமூகத்தையும் சரித்திரத்தையும் பின்னுக்கு தள்ளும் பதிவுகள் , அள்ளி
வீசப்படும் மருத்துவ ஆலோசனைகள் , ஆன்மிகத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அறிவியல்
முலாம் பூசும் போலி அறிவியல் வாதங்கள் இப்படி பட்டியல் போட்டால் நீளும் .இவை
எல்லாம் முற்றாக ஒதுக்கப்பட வேண்டியவை .
எல்லாவற்றிற்கும்
லைக் போட வேண்டியதோ ,பதில் போட வேண்டியதோ இல்லை . பலவற்றை ignore செய்ய வேண்டும்
அதாவது கண்டு கொள்ளாமல் ஒதுக்க வேண்டும். பல கெட்ட பதிவுகளுக்கு நீங்கள் பதில்
போட்டு அதனை புதிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விடுகிறீர்கள் .இப்படி செய்யாமல்
தவிர்க்கலாம். பதில் சொல்லுவதாயின்கூட
உங்களின் தனிப் பதிவாக்கி அவர் பெயரை இழுக்காமல் பதிந்து ஆக்க பூர்வ விவாததுக்கு
வழி செய்யலாம்.
எல்லாவற்றிலும் பெரும் தீங்கு ஒன்று ஒண்டு அதுதான் நல்லவர்களின்
மவுனம் . நல்லவர்கள் இதில் உரக்கப் பேசாதவரை கெட்டவர்கள் ஆட்டம் ஓங்கத்தானே
செய்யும் !
முற்போக்கு
இடதுசாரி தோழர்களே ! சக தோழர்களின் எத்தனை பதிவுகளை நீங்கள் லைக் போட்டும் பகிர்ந்தும்
கமெண்ட் போட்டும் பிரபலப் படுத்துகிறீர்கள் ? உங்களின் இந்த அடக்கம் அல்லது அசட்டைப்
போக்கே நல்ல கருத்துகளின் குரல் வலுக்க பெரும் தடையாகிறது .
தீக்கதிர் போன்ற
இதழ்களில் பிரசுரமாவதில் நாலு செய்தியையாவது பதிய ஏன் தயக்கம் ? உங்கள் மூலம் ஒரே
ஒரு புதியவர் அதை வாசித்தாலும் நல்லதுதானே !
நான் கேட்கிறேன்
, “ நாசிக் – மும்பை வெங்காயத்துக்கு விலைகோரி நடந்த மாபெரும் செங்கொடி எழுச்சிப்
பயணமும் வெற்றியும் ,அண்மையில் டெல்லியில் விவசாயிகள் பெரும்படையாய்த் திரண்டது ; இவற்றை உங்களில் எத்தனை பேர் பகிர்ந்தீர்கள் !
பதிந்தீர்கள் !” அவரவர் பாணியில் இச்செய்தியை கொண்டு சென்றிருந்தால் எவ்வளவு வீச்சாயிருந்திருக்கும்
?
டீக்கடையில் அரசியல்
பேசுவது , திண்ணையில் பேசுவது ,அலுவலக அரட்டையில் பேசுவது அதுபோல சமூக ஊடகங்களில் பேசுவதும் நம் பிரச்சாரத்தின்
ஒரு கூறே . கொஞ்ச நேரம் இதற்கும் இடம் கொடுங்கள்.
இப்போது ஆளும் வர்க்கம்
சமூக ஊடகங்களின் கழுத்தை நெரிக்கத் துவங்கிவிட்டது .நாளை என்ன ஆகுமோ ? யார் கண்டார்கள்
? வாய்ப்பு கிடைக்கும் வரை முடிந்தவரை இதனை பயன்படுத்தல் நம் கடனே !
சுபொஅ.
23/3/2023.
0 comments :
Post a Comment