Posted by அகத்தீ Labels:

 


பகுதி கடந்து போய் உங்களால் சாதியை கடக்க முடியுமா?

மாவட்டம் கடந்து?

மாநிலம் கடந்து?

தேசம் கடந்து,

கண்டம் கடந்து

நிதர்சனம் இல்லை.

கரையான்போல இது....

 

சாதி பார்க்க மாட்டேன், எல்லோர் வீட்டிலும் சாப்பிடுவேன்என்பதின் உள்ளார்ந்த அர்த்தம் ….நேரடி அர்த்தம் என்ன?

 

உங்கள் last name என்ன?

நீங்கள் vegetarian?

Non veg ?

அப்ப Beef சாப்பிடுவீர்களா?

நீங்கள் என்ன ஆள்கள்?’ என்பதின் இரண்டாம் அடுக்கு கேள்விகள் இவையே.

 

ஆனால் நான் கண்டது என்னவென்றால்

சாதி ஒருபோதும் மறையவில்லை.

அதை நேரடியாக கேட்கும் துணிவு மட்டும் சிலரிடம் குறைந்திருக்கலாம். 

 

 

என் மகள் பானுநவீன் எழுதிய கவிதை அதிர்ச்சி அல்ல உறுத்தும் உண்மை . கடல் கடந்து கனடா போனாலும் அங்கேயும் தூக்கிச் சுமக்கும் சாதியம் கண்டு அவள் எழுதியதை இங்கு பகிர்ந்திருக்கிறேன் . அவள் என்னோடு உரையாடும் போது சொல்லும் செய்திகள் இன்னும் கொடுமையானவை . சாதியம் எங்கும் ஏதோ ஓர் வடிவத்தில் மென்மையாகவோ வண்மையாகவோ …. நம்முன் உள்ள சவால் .

 

சுபொஅ.

08 /05 /26.

 

 

 


0 comments :

Post a Comment