Posted by அகத்தீ Labels:

 




ஒட்டடை அடித்துக் கொண்டே இருக்கிறோம்

ஒட்டடை சேர்ந்து கொண்டே இருக்கிறது

ஒவ்வொருமுறை வீட்டை சுத்தம் செய்யும் போதும்

வேண்டாத பொருட்கள் மூட்டையாகக் கிடைக்கிறது

வீட்டைக் காலையில்தான் பெருக்கினோம்

மாலையில் குப்பையாக் கிடக்கிறது

உடையோ உடலோ உள்ளமோ மீண்டும் மீண்டும்

அழுக்காகிக் கொண்டே இருக்கிறது

சாக்கடையும் சந்தணமும் கலந்ததுதான் வாழ்க்கை

சுத்தம் செய்துகொண்டே இருந்தால்தான்

சந்தணத்தின் வாசத்தை நுகர முடியும் ! தோழா !

 

சுபொஅ.

 

0 comments :

Post a Comment